ETV Bharat / state

'டெங்கு பாதிப்பைத் தடுப்பதில் கவனம் தேவை' - chennai latest news

கரோனா தொற்று இருப்பதால் டெங்கு பாதிப்பைத் தடுப்பதில் கவனக்குறைவாக இருந்துவிடக் கூடாது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

author img

By

Published : Oct 3, 2021, 1:29 PM IST

Updated : Oct 3, 2021, 1:49 PM IST

சென்னை: நான்காம் கட்ட கரோனா தடுப்பூசி முகாமை ராதாகிருஷ்ணன் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று (அக்.3) ஆய்வுசெய்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளரைச் சந்தித்துப் பேசிய அவர், "கரோனா தடுப்பூசி மூன்றாம்கட்ட முகாமில் நல்ல வெற்றி அடைந்துள்ளோம். தமிழ்நாடு முழுவதும் இன்று 24 ஆயிரத்து 760 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுகிறது. சென்னையில் ஆயிரத்து 600 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றுவருகின்றது.

கையிருப்பில் உள்ள தடுப்பூசி

தமிழ்நாட்டில் இதுவரை அரசு சார்பில் நான்கு கோடியே 54 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தனியார், அரசு இரண்டும் இணைந்து இதுவரை நான்கு கோடியே 79 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தற்போது 33 லட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

கரோனா தொற்று தொடர்ந்து நிலையான பாதிப்பாக இருந்துவந்தது. ஆனால் தற்போது மேற்கு மாவட்டங்களில் தொற்று குறைவதற்கான அறிகுறி தென்படத் தொடங்கியுள்ளது. கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் கடந்த இரண்டு மாத இறப்பு குறித்து தமிழ்நாடு முழுவதும் கணக்கெடுக்கப்பட்டது.

அதில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருந்தவர்களில் 90 விழுக்காட்டினர் தடுப்பு ஊசி செலுத்தாதவர்கள். இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருந்தாலும் வேறு சில காரணங்களால் உடலில் உள்ள நோயால் 3.5 விழுக்காட்டினர் இறந்துள்ளனர்.

சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை

ஒரு தவணை மட்டும் தடுப்பூசி செலுத்தியவர்களின் 7.4 விழுக்காட்டினர் உடலிலுள்ள பிற நோய்களின் தாக்கத்தில் இறந்துள்ளனர். எனவே தடுப்பூசி போடாதவர்கள் முதல் தவணையும், தடுப்பூசி போட்டவர்கள் உரிய நாளில் இரண்டாம் தவணையும் போட்டுக்கொள்ள வேண்டும்.

மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் உள்ள முதியவர்களில் 42 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுள்ளனர். அவர்களில் 22 லட்சம் பேர் முதல் தவணைத் தடுப்பூசியும் போட்டுள்ளனர். இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த தகுதி உள்ள அனைவரும் இன்று நடைபெறும் சிறப்பு முகாமில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் ஒருகாலத்தில் 3.11 லட்சமாக இருந்த கரோனா சிகிச்சைப் பெறுபவர்கள் எண்ணிக்கை குறைந்து 17 ஆயிரமாக தற்போது உள்ளது. அறுபது வயதுக்கு மேலான அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக சுகாதாரத் துறை உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளது.

மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

மேலும் வீடு தேடிச் சென்று தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் வீட்டில் உள்ள முதியவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு இளைஞர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். இன்று நடைபெறும் சிறப்பு முகாமில் அனைவரும் சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் தற்போது கரோனாவுடன் டெங்கு பாதிப்பு கவனிக்க வேண்டிய முக்கியமான நோயாக உள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் மூலம் டெங்கு குறித்து கண்காணிக்கப்பட்டுவருகிறது. பல இடங்களில் நீர் மூடி வைக்காத நிலை தற்போதும் இருக்கிறது. இதன் மூலம் ஏடிஸ் கொசு உற்பத்தியாகி பரவக்கூடும்.

டெங்கு பாதிப்பு எண்ணிக்கை

எனவே பொதுமக்கள் மழைக்காலங்களில் நீர் தேங்காமல் தங்கள் வீட்டில் உள்ள நீர்த் தொட்டிகள், நீரைச் சேமித்துவைக்கும் பாத்திரங்களை மூடிவைக்க வேண்டும். தமிழ்நாட்டில் நாள்தோறும் 20 நபர்களுக்கு டெங்கு பாதிப்பு எண்ணிக்கை பதிவாகிவருகிறது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் இரண்டாயிரத்து 410 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டது.

தற்போதுவரை இந்த ஆண்டில் 83 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்ததில் இரண்டாயிரத்து 919 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. டெங்கு பாதிப்பால் இரண்டு பேர் இதுவரை இறந்துள்ளனர்.

பூச்சியியல் வல்லுநர்கள் கொசு உற்பத்தி குறித்து ஆய்வு செய்துவருகின்றனர். தமிழ்நாட்டில் தொடர்ந்து டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோய்களும் புதுச்சேரி வல்லுநர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகின்றன” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இன்று 4ஆவது சிறப்பு முகாம்: 25 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு

Last Updated : Oct 3, 2021, 1:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.