ETV Bharat / state

ஆசிரியர் தினவிழாவில் டீச்சர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்! - teachers day

Dr Radhakrishnan Award: EMIS ல் புள்ளி விவரங்கள் பதிவு செய்வதில் இருந்து ஆசிரியர்களுக்கு விடுதலை அளிக்கப்படும் என ஆசிரியர் விருது வழங்கும் விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

Radhakrishnan Award function anbil mahesh said teachers will exempted from recording statistics in EMIS
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2023, 10:25 PM IST

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

சென்னை: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் “டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது” வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (செப்.5) நடைபெற்றது. இந்த விருது 390 ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.

பள்ளிக்கல்வித்துறையில் 170 ஆசிரியர்களுக்கும், தொடக்க கல்வித்துறையில் 169 ஆசிரியர்களுக்கும், 37 தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும், இரண்டு ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆசிரியர்களுக்கும், 2 மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பணிபுரியும் விரிவுரையாளர்கள் 10 பேர் என 390 பேருக்கு விருது வழங்கப்பட்டன.

விழாவில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “ஆசிரியர் தினத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். என்னுடைய இரண்டாம் பெற்றோர்களாகிய ஆசிரியர் பெருமக்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள். ஆசிரியர்கள் ஏங்கினால் வகுப்பறைகள் தேங்கும் என்றார் பேரறிஞர் அண்ணா. இவ்விழாவின் நாயகர்கள் மட்டுமல்ல! வருங்கால நாயகர்களை உருவாக்கப் போகிறவர்களும் ஆசிரியர்களாகிய நீங்கள்தான்!

ஆசிரியர்களாகிய நீங்கள் எப்போது தன்னிறைவு அடைவீர்கள்? நீங்கள் பெறும் சம்பளத்தினால் அல்ல! சேர்க்கும் செல்வங்களால் அல்ல! இன்னும் சொல்லப்போனால் நீங்கள் பெற்றெடுத்த குழந்தைகள் சாதித்தால் கூட தன்னிறைவு அடைய மாட்டீர்கள். உங்கள் வகுப்பு மாணவன், உங்களிடம் பயின்ற மாணவன் சமூகத்தில் உயர்ந்த மனிதராக, நல்ல மனிதராக, பிறருக்கு உதவும் மனம் கொண்டவராக உயரும் போதுதான் நீங்கள் தன்னிறைவு அடைவீர்கள்.

நான் அமைச்சராகப் பொறுப்பேற்ற 2 - 3 மாதங்களுக்கு ஆசிரியர்கள் என்னைப் பாராட்டினார்கள், 5 மாதங்களுக்கு பிறகு, அமைச்சராகியதும் கோரிக்கைகள் எதையும் ஏற்காமல் உள்ளார் எனக் கூறினர். அதில் ஆசிரியர்கள் சங்கங்கள் நாசுக்காக கவிதை வடிவில் தெரிவித்தனர்.

  • மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வாழ்த்துகளுடன் ஆசிரியர் தினமாகிய இன்று ஆசிரியப் பெருமக்களுக்கு "டாக்டர் சர்வப்பள்ளி இராதாகிருஷ்ணன் விருது" வழங்கி கெளரவித்தோம்.

    ஆசிரியப் பெருமக்களின் அன்பு தலைவராக திகழ்ந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா… pic.twitter.com/biEJmId1J0

    — Anbil Mahesh (@Anbil_Mahesh) September 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, ஆசிரியர் சங்கங்களை நேரடியாக அழைத்து கருத்துக்களைக் கேட்டு அறிந்தோம். அப்போது அவர்கள் ஏற்கனவே, கொடுத்த கோரிக்கை தான் எனக் கருத்து தெரிவித்தனர். இருந்தாலும் முழு கோரிக்கைகளையும் நாங்கள் படித்து தெரிந்து கொண்டோம். காத்திருந்து கோரிக்கையை அளித்துவிட்டுச் சென்றனர்.

ஆசிரியர்கள் சங்கம் வைத்த கோரிக்கைகள் குறித்து தற்போது நிதி அமைச்சரிடம் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. ஆசிரியர்கள் சங்கம் வைத்த கோரிக்கைகளில் 5 கோரிக்கைகளை முதலமைச்சரிடம் எடுத்துச் சொல்ல இருப்பதாகவும், நிதி நிலைக்கு ஏற்றவாறு கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றார்.

மேலும், இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறையை முதல் இடத்திற்குக் கொண்டு செல்ல அனைவரும் தொடர்ந்து உழைக்க வேண்டும். EMIS திட்டம் (Educational Management Information System) மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருகை மற்றும் புள்ளி விவரங்களை வட்டாரக் கல்வி அலுவலகர்கள் மூலம் பதிவு செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இரண்டு மாதங்களில் இது செயல்படுத்தப்படும்” என்றார்.

இவ்விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.பி.க்கள் தயாநிதிமாறன், கலாநிதி வீராசாமி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி; சாமியார் மீது நடவடிக்கை எடுக்க காவல் ஆணையரிடம் புகார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.