சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று (செப்.29) செல்லப் பிராணிகளுக்கான இலவச வெறிநோய்த் தடுப்பூசி அளிக்கும் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் வைத்தியநாதன் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து நீதியரசர் அனிதா சுமிந்த் வெறிநோய் குறித்த விழிப்புணர்வு மலரை வெளியிட்டார்.
சென்னையை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட செல்லப்பிராணி வளர்ப்போர், இந்த முகாமில் கலந்துகொண்டு தங்ளது செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டனர்.
இதையும் படிங்க:திருநெல்வேலியில் மர்மக் காய்ச்சலுக்கு சிறுமி பலி; பொதுமக்கள் பீதி