ETV Bharat / state

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு: விடைத்தாள், வினாத்தாள் வெளியீடு - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு

கடந்த டிசம்பர் 8ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்விற்கான வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை ஆசிரியர் வாரியம் வெளியிட்டுள்ளது.

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு :விடைத்தாள், வினாத்தாள் வெளியீடு

author img

By

Published : Dec 14, 2021, 9:19 PM IST

சென்னை: 2017-2018ஆம் ஆண்டு அரசு பாலிடெக்னிக்கில் 1060 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்தத் தேர்வினை எழுதுவதற்குப் பெண் தேர்வர்கள் 70 ஆயிரத்து 195 பேரும், ஆண் தேர்வர்கள் 67 ஆயிரத்து 804 தேர்வர்களும், 12 திருநங்கைகளும் விண்ணப்பம் செய்தனர்.

5 நாட்களாக நடந்த தேர்வுகள்:

இவர்களுக்கான தேர்வுகள் டிசம்பர் 8ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை 15 பாடங்களுக்கு 5 நாட்கள் காலை, மாலை நேரங்களில் 10 பிரிவுகளாக கணினி மூலம் நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் சென்னை, மயிலாடுதுறை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களைத் தவிர 34 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது.

தேர்வர்கள் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மொபைல் போன், மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. கணினி மூலம் நடைபெறும் தேர்வினை ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருந்து தொடர்ந்து கண்காணித்தனர்.

தேர்வு எழுதியவர்கள், வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்யலாம்:

மேலும் தேர்வு முடிந்தநிலையில் தேர்வு எழுதியவர்களுக்கு வினாத்தாள் மற்றும் அவர்கள் விடைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் தேர்வர்கள் https://trbpolviewqp.onlineapplicationform.org/ObjectionTrackerPortalWeb/loginPage.jsp என்ற இணையதளத்திற்குச் சென்று, பதிவு எண், பிறந்த தேதி, தேர்வு நடைபெற்ற நாள், எந்தப் பாடப்பிரிவு ஆகிய விவரங்களைப் பதிவு செய்து, வினாத்தாள் மற்றும் விடைத்தாள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:'அடிக்கடி போராட்டங்கள் நடத்தி மக்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லை' - செல்லூர் ராஜு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.