ETV Bharat / state

'குயின்' தொடருக்கு மீண்டும் சிக்கல்! - Gautham Menon

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 'குயின்' இணையதள தொடருக்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

queen
queen
author img

By

Published : Dec 13, 2019, 4:35 PM IST

தமிழ்நாட்டில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டுகட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில், ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'குயின்' இணையதள தொடர் நாளை வெளியாக உள்ள நிலையில், இந்தத் தொடருக்கு தடைவிதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜோசப் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், "கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் தடைவிதித்திருந்தது. அதேபோல், தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 'குயின்' இணையதள தொடரையும் வெளியிட தடைவிதிக்க வேண்டும். இது தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு கொடுத்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தலைவி படத்திற்கும் குயின் தொடருக்கும் தடைவிதிக்க ஜெ. தீபா தொடர்ந்த வழக்கில் சில நிபந்தனைகளுடன் குயின் தொடரை வெளியிட உயர் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'குயின்' இணையதளத் தொடருக்கும், 'தலைவி' திரைப்படத்துக்கும் தடையில்லை!

Intro:Body:உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குயின் இணையதள தொடருக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இருகட்டமாக நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஜெயலலிதா'வின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட குயின் இணையதள தொடர் நாளை வெளியாக உள்ள நிலையில், இந்த தொடருக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அரும்பாக்கத்தை சேர்ந்த ஜோசப் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போது பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைபடத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது. அதேபோல், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குயின் இணையதள தொடரையும் வெளியிட தடை விதிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு கொடுத்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.