சென்னை: சென்னையை அடித்தளமாகக் கொண்ட இயங்கிவரும் குளோபல் பார்மா ஹெல்த்கேர் நிறுவனம் தயாரித்த கண் சொட்டு மருந்து மாதிரிகளில் மருந்து தரமாக உள்ளது என்று தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்குநர் பி.வி விஜயலக்ஷ்மி தெரிவித்துள்ளார்.
சென்னை ஆலையில் தயாரிக்கப்பட்ட கண் சொட்டு மருந்துகளின் மாதிரிகளில் கலப்படம் எதுவும் இல்லை என்று தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநர் பி.வி.விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
மேலும்"கண் சொட்டு மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. சோதனை செய்யப்பட்ட நிலையில் கண் சொட்டு மருந்து தரமாக உள்ளது. மருந்து உற்பத்திக்கு பயன்படுத்திய மூலப்பொருட்களும் தரநிலைகளின்படி கண்டுபிடிக்கப்பட்டன," என்றும் இயக்குநர் கூறினார்.
எனினும், விஜயலக்ஷ்மி அமெரிக்க கண்காணிப்புக் குழுவின் கண்துளிகள் பற்றிய கருத்துகள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையை அடித்தளமாக கொண்டு அமைந்துள்ள குளோபல் பார்மா ஹெல்த்கேர் நிறுவனம், கடந்த பிப்ரவரியில் அமெரிக்க சந்தையுடன் இணைக்கப்பட்ட கண் சொட்டு மருந்து தயாரிப்பை நிறுத்தியது.
"மேலும் குளோபல் பார்மாவில் தயாரிக்கப்பட்ட கண் சொட்டு மருந்து தரமாக உள்ளதாக ஆய்வு அறிக்கையை தமிழக மருத்துவத்துறையிடம் சமர்ப்பித்துள்ளோம்" என மருந்து கட்டுப்பாட்டாளர் தெரிவித்தார். கடந்த பிப்ரவரி மாதத்தில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு அமைப்பு எஸ்ரிகேர் ஆர்டிஃபீஷியல் டியர்ஸ் என்ற மருந்தில் கலப்படம் நடந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், யாரும் அந்த மருந்தை பயன்படுத்த வேண்டாம் என அந்நிறுவனம் நுகர்வோருக்கு எச்சரிக்கை விடுத்தது.
இதைத்தொடர்ந்து குளோபல் பார்மா ஹெல்த்கேர் நிறுவனத்தின் உற்பத்தி ஆலையில் நள்ளிரவு 2 மணி வரை சோதனை நடந்தது. மேலும் அமெரிக்க அரசின் ஆய்வு அறிக்கையின் இறுதி முடிவுகளை வைத்துத்தான் குளோபல் ஃபார்மா நிறுவனத்தின் கண் சொட்டு மருந்தில் கலப்படம் இருந்ததா என்று உறுதி செய்யமுடியும் எனவும் தமிழ்நாடு சுகாதாரத்துறையின் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனமும் தனிப்பட்ட முறையில் மாதிரிகளைச் சோதனை செய்யும் என முன்னதாக தமிழக அரசின் மருத்துவத்துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரத்தில் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகமான(FDA) விதிமீறல்களை கண்டறிந்தததால் குளோபல் பார்மா கண்சொட்டு மருந்துகள் அமெரிக்காவில் 68 கண் தொற்றுநோய்களுடன் இணைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் 8 பேர் பார்வை இழந்தனர். மூவர் உயிரிழந்தனர். ஆனாலும் இந்த விவகாரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நபர் கரோனாவால் பலி