ETV Bharat / state

மக்கள் இயக்கத்தைப் பலப்படுத்தும் நடிகர் விஜய்! அடுத்த மூவ் என்ன?

விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாவட்ட வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்போவதாகத் தகவல் கிடைத்துள்ளது.

புஸ்ஸி ஆனந்த் மாவட்ட வாரியாக ஆய்வு
புஸ்ஸி ஆனந்த் மாவட்ட வாரியாக ஆய்வு
author img

By

Published : Jul 28, 2023, 8:47 PM IST

சென்னை: நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவராக விளங்குபவர். நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் ஏராளமான நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார். குறிப்பாக தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது, பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டி அவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்குவது, இரவு நேர பாடசாலைத் திட்டம், ஏழைகளுக்கு விலையில்லா விருந்தகம், குழந்தைகளுக்கு ரொட்டி பால் திட்டம் உள்ளிட்டத் திட்டங்கள் தனது அரசியல் வருகையினை உறுதிபடுத்தும் விதத்தில் இருப்பதாக மக்களின் கருதுகின்றனர்.

இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் கட்டமைப்பு எந்த வகையில் உள்ளது என்றும்; அதை மேம்படுத்த என்னென்ன தேவை என்பது குறித்து ஆலோசிக்க விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விரைவில் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செல்கிறார் என்றும்; மேலும் நிர்வாகிகளின் செயல்பட வேண்டிய முறைகள் உள்ளிட்டவற்றை குறித்தும் அறிவுறுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் மக்கள் இயக்கத்தின் அடிப்படையில் தமிழகத்தில் 150க்கும் மேல் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அதில் சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 15 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட தேதியில் புஸ்ஸி ஆனந்த் ஆய்வினை மேற்கொள்ள உள்ளார் என்றும் தகவல் கிடைத்துள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் அவர் இந்த சுற்றுப் பயணத்தை ஆரம்பிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அரசியல்வாதிகள் நடிகராகும்போது, நடிகர்கள் அரசியல்வாதி ஆகக்கூடாதா: விஷால் கேள்வி?

மேலும் இரவு பாடச்சாலை திட்டம், ஏழைகளுக்கு விலையில்லா விருந்தகம், குழந்தைகளுக்கு ரொட்டி பால் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை வேகப்படுத்த வேண்டும் என்று நடிகர் விஜய், புஸ்ஸி ஆனந்திற்கு உத்தரவிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இன்னும் ஓரிரு வாரங்களில் அவர் இந்த சுற்றுப் பயணத்தை ஆரம்பிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் விஜய் நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படத்தில் அர்ஜுன், த்ரிஷா, மிஷ்கின், சஞ்சய் தத் என ஏகப்பட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். வருகிற அக்டோபர் 19ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

அடுத்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார், விஜய். தற்போது லியோ படப்பிடிப்பை முடித்துவிட்டு வெளிநாட்டில் ஓய்வு எடுத்து வருகிறார் நடிகர் விஜய். அதற்காக அவர் விமான நிலையத்தில் சோதனை செய்யும் போது எடுக்கப்பட்ட வீடியோ அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இதையும் படிங்க: தமிழ்த் திரைத்துறை குறித்து தவறான தகவல் பரவி வருகிறது: பவன் கல்யாண் கருத்துக்கு நாசர் விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.