புதுச்சேரி மாநிலத்தில் காலியாக இருந்த தேர்தல் ஆணையர் பதவிக்கு, 2015ஆம் ஆண்டு மே மாதம் ஓய்வுபெற்ற ஆட்சியர் பாலகிருஷ்ணனை நியமித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டது.
மாநிலத் தேர்தல் ஆணையர் பாலகிருஷ்ணனின் நியமனத்தை ரத்துசெய்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்துசெய்யக்கோரி புதுச்சேரி உள்ளாட்சித் துறை அமைச்சர் நமச்சிவாயம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார்.
அதில், தனது முன்னாள் ஆலோசகர் தேவநீதிதாசை மாநிலத் தேர்தல் ஆணையராக நியமிக்கும்வகையில், தகுதி நிபந்தனைகளில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மாற்றங்கள் செய்துள்ளதாக மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வு, மாநில பிரதிநிதிகளிடம் கருத்து மோதல் ஏற்பட்டால் பேசி சமரசம் செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்து கிரண்பேடியின் உத்தரவு செல்லும் எனவும் நமச்சிவாயம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: நாகர்கோவில் உதவி பேராசிரியருக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தக் கூடாது - நீதிமன்றம் உத்தரவு!