புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று (மே 28) அவரது வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க வருகை புரிந்த பிரதமர் மோடியிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவை மீட்பது, நீட் தேர்வு ரத்து, தமிழை வழக்காடு மொழியாக மாற்றுவது, உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்திருந்தார்.
மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை கேட்டுப் பெறுவதற்கு ஒரு மாநில முதலமைச்சருக்கு உரிமை உண்டு. அதை புதுச்சேரி மாநில காங்கிரஸ் வரவேற்கிறது. ஆனால், விபரம் தெரியாமல் மோடியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த மனுவை பாஜகவினர் அரைவேக்காட்டுத் தனமாக விமர்சனம் செய்வது கண்டனத்திற்குரியது” என்றார்.
மின் துறையை தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்த நாராயணசாமி மின்துறை தொழிலாளர்களுக்கு ரங்கசாமி கொடுத்த வாக்குறுதிகளை மீறிவிட்டார் எனவும் தொடர்ந்து மின் துறையை தனியார் மயமாக்கும் கைவிடாத பட்சத்தில் அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
2011 முதல் 14ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக ரங்கசாமியால் ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டுவர முடியவில்லை, காங்கிரஸ் ஆட்சியில்தான் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், காங்கிரஸ் ஆட்சியை பற்றி குறை கூற ரங்கசாமிக்கு எந்த தகுதியும் இல்லை என நாராயணசாமி குற்றம் சாட்டினார்.
மேலும், “தற்போது வீடு, நிலம், அபகரிப்பு, கொலை, கொள்ளை, நடப்பது வாடிக்கையாகிவிட்டது. கஞ்சா விற்கப்படுவதாகவும் வெளிநாட்டினர் கோகைன் போதைப் பொருள் விற்பனை செய்கிறார்கள். ஆனால், இதையெல்லாம் தடுக்க வேண்டும் முதலமைச்சர் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்” என விமர்சித்தார்.
ஒரு பொம்மை ஆட்சி நடைபெறுவதாகவும் சிறையில் இருந்த கைதிகள் கொடுக்கும் உத்தரவின் பேரில் புதுச்சேரியில் வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் செயல் தொடங்கியுள்ளதாகவும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு அனுமதி மறுப்பு; இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிப்பு!