ETV Bharat / state

’சீமான் ஒரு அரசியல் தலைவர்போல் செயல்படவில்லை’- நாராயணசாமி

சென்னை: சீமானின் செயல்பாடுகள் எதுவும் அரசியல் கட்சித் தலைவர் செய்வதுபோல் இல்லை என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

நாராயணசாமியின் பேட்டி
author img

By

Published : Oct 14, 2019, 10:48 PM IST

சென்னை வந்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ”முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டார். இது இந்தியாவை மீளாத் துயரில் ஆழ்த்தியது. இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட ராஜிவ் காந்தியை கொச்சைப்படுத்தி விக்கிரவாண்டியில் சீமான் பேசியது கண்டிக்கத்தக்கது. தொடர்ந்து விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் தலைவர்களை இழிவாகவும் பேசிவருவது சீமானின் பழக்கமாக உள்ளது.

நாராயணசாமியின் பேட்டி

திரைப்பட இயக்குநராக இருந்து அரசியலுக்கு வந்த சீமான் மற்ற தலைவர்களை விமர்சனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். நாட்டிற்காகத் தியாகம் செய்து பயங்கரவாதத்திற்கு பலியான தலைவர்கள் பலர் இருந்துள்ளனர். ராஜிவ் காந்தி படுகொலை கொடூரமானது. சீமானை எதிர்த்து தமிழ்நாடு, புதுச்சேரியில் போராட்டம் நடந்துவருகிறது. மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துகளை அவர் தொடர்ந்து பேசிவருகிறார். சீமானின் செயல்பாடுகள் எதுவும் ஒரு அரசியல் கட்சித் தலைவர் செய்வதுபோல் இல்லை”என்றார்.

நாராயணசாமியின் பேட்டி

மேலும், புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால், அவர் வெற்றிபெறுவார் எனவும் நாராயணசாமி கூறினார்.

Intro:புதுவை முதல்வர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் பேட்டிBody:புதுச்சேரி மாநில மக்களுக்கும் அரசுக்கும் எதிராக கிரண்பேடி செயல்படுகிறார் சென்னை விமான நிலையத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி;

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டார். இந்தியாவை மீள துயரில் ஆழ்த்தியது. இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர். விஞ்ஞான நாடாகவும் வெளியுறவு கொள்கை, நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட ராஜீவ்காந்தியை கொச்சைப்படுத்தி சீமான் பேசியது கண்டிக்கத்தக்கது. தொடர்ந்து விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் தலைவர்களை இழிவாகவும் பேசி வருவது சீமானின் பழக்கமாக உள்ளது.

திரைப்பட இயக்குனராக இருந்து அரசியலுக்கு வந்த சீமான் மற்ற தலைவர்களை விமர்சனம் செய்வது தவிர்க்கப்பட வேண்டும். நாட்டிற்காக தியாகம் செய்து தீவிரவாதத்திற்கு பலியான தலைவர்கள் உள்ளனர். ராஜீவ்காந்தி படுகொலை கொடூரமானது. துரதிர்ஷ்டவசமானது. சீமானை எதிர்த்து தமிழகம், புதுச்சேரியில் போராட்டம் நடந்து வருகிறது. மக்கள் ஏற்றுக்கொள்ள கூடாத கருத்துகளை பேசி வருகிறார்.

சீமானின் செயல்பாடுகள் அரசியல் தலைவர் போல் இல்லை.

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவார். அரசை விமர்சனம் செய்ய எதிர்கட்சிகளால் முடியாததால் பொய்யான குற்றச்சாட்டுகளை சொல்லுவதை மக்கள் புறக்கணித்து விட்டனர்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் ஏனாம் பகுதிக்கு சென்று உள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு வழங்கி உள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி துணை நிலை ஆளுநர் செயல்பட்டு வருகின்றார். பல வளர்ச்சி திட்டங்களை தடுத்து நிறுத்தி உள்ளார். ஏனாம் பகுதி மீனவர்கள் வாழ்வாதார திட்டங்கள், மத்திய அரசிடம் இருந்து ரூ.129 கோடி வெள்ள தடுப்பு பணிக்காக கோப்பை காலதாமதம் செய்கிறார். பல திட்டங்களை முடக்கி வருகிறார். அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக செயல்படுகிறார். மாநில வளர்ச்சிக்கு துணை நிலை ஆளுநர் எதிராக செயல்படுகிறார்.

ரங்கசாமி முதலமைச்சராக இருந்த போது சுற்றுலா பயணிகளுக்காக தீவுகள் ஏற்படுத்தப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. ஆந்திராவுக்கு சொந்தம் என்று ஒருவர் துணை நிலை ஆளுநருக்கு புகார் செய்ததால் ஆந்திரா மாநிலத்திற்கு ஆதரவாக பேசுகிறார். மாநில மக்களுக்கும் அரசுக்கும் எதிராக கிரன்பேடி செயல்படுகிறார். எந்த தீர்ப்பு வந்தாலும் மதிப்பதில்லை.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.