சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் தமிழ்நாடு நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில், கரோனா வைரஸ் தொற்று தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள், வளர்ச்சி திட்டப்பணிகள்
தொடர்பாக மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது, பெருநகர சென்னை மாநகராட்சியில் 33 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளையும் மற்றும் தூய்மை பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் உள்ள 200 கோட்டங்களிலும், 200 உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்களை குழு தலைவராக (covid - 19 Response team head) நியமித்து மைக்ரோ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இக்குழுவில் மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், இதர அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றனர்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் கிருமி நாசினி தெளித்தல், கபசுரக் குடிநீர் வழங்குதல், மறுபயன்பாட்டுடன் கூடிய துணியிலான முகக் கவசங்கள் வழங்குதல், வீடு வீடாகச் சென்று நோய் அறிகுறி உள்ளவர்களை கண்டறிதல், 60 வயதுக்கும் மேற்பட்டோர், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை வழங்குதல், கரோனா நோய் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய பணிகளை தன்னார்வலர்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள்.
லாரியில் வரும் தண்ணீரை பிடிப்பதற்காக மக்கள் பெருமளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்க தலா 3 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 350 தொட்டிகள் அமைக்கப்பட்டு தகுந்த இடைவெளியுடன் மக்கள் தண்ணீர் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிக்காக, கோட்டத்திற்கு மருத்துவ முகாம்கள் என நாள்தோறும் 200 கோட்டங்களில் நடைபெறுகின்றன. கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளுக்கு மருத்துவ அலுவலர் குழுவோடு சென்று மருத்துவ முகாம்கள் நடத்தவும் 140 நகர ஆரம்ப சுகாதார மையங்களில் புற நோயாளிகளுக்கு சிகிச்சை என 680 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த மருத்துவ முகாம்களை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி, நகர்ப்புறங்களில் வாழும் பதிவு செய்யப்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு ரூ. 1000 வீதம், தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத் தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 853 தெருவோர வியாபாரிகளுக்கு ரூ. 10.58 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றார்.
கூட்டத்தில் அமைச்சர் நகர்ப்புற - ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கரோனா வைரஸ் தொற்று தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் அரசு கூடுதல் தலைமை செயலாளர் உள்பட உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
மருத்துவ முகாம்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் - அமைச்சர் வேலுமணி - அமைச்சர் வேலுமணி
சென்னை: மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் 680 மருத்துவ முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கேட்டுக்கொண்டார்.