ETV Bharat / state

mall roof collapse: கனமழை : இடிந்து விழுந்த பிரபல மாலின் ஃபால் சீலிங் - சென்னையில் பிரபல மாலின் ஃபால் சீலிங் இடிந்து விழுந்தது

mall roof collapse: சென்னையில் பிரபல மாலின் ஃபால் சீலிங் இடிந்து விழுந்ததால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

மாலின் ஃபால் சீலிங் இடிந்து விழுந்த காட்சி

author img

By

Published : Dec 31, 2021, 6:54 AM IST

mall roof collapse: சென்னை அண்ணா நகரில் 6 அடுக்குகள் கொண்ட பிரபல மால் ஒன்று இயங்கி வருகிறது. இந்த மாலில் 250-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் 10 திரைகள் கொண்ட திரையரங்கம் உள்ளது. இந்த மாலிற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்வதுண்டு. குறிப்பாக மாலின் மேற்கூரை இரும்பு பைப்புகள் தாங்கி இருக்கக்கூடிய கண்ணாடியால் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் இன்று (டிசம்பர் 30) மாலை முதல் பெய்து வரும் கனமழையினால் மாலின் ஃபால் சீலிங் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் மாலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மாலின் ஃபால் சீலிங் இடிந்து விழுந்த காட்சி

அதிர்ஷ்டவசமாக ஒருவருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்து தொடர்பாக திருமங்கலம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: Leopards Spotted At Residential Areas In Coimbatore: நாய்களை வேட்டையாடி வரும் சிறுத்தையைப் பிடிக்க மேலும் ஒரு கூண்டு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.