ETV Bharat / state

கோழிக்கறிக்கும் கொரோனாவுக்கும் என்ன சம்பந்தம்? - விளக்குகிறார் குழந்தைசாமி

சென்னை: இந்த வைரஸால் இறப்பு விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது. இதற்கான மருந்துகள் இல்லை என்பது தவறானது. மருந்துகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதனைக் கண்டு யாரும் அஞ்ச வேண்டாம். குளிர்சாதன அறையைவிட சாதாரண காற்று உள்ள அறையில் இருந்தால் இந்தக் கிருமிகளின் தாக்கம் குறைவாகத்தான் இருக்கும்.

public health director kolandasamy about corono

author img

By

Published : Mar 6, 2020, 9:23 AM IST

சீனாவின் வூஹான் மாகாணத்தில் தொடங்கிய கோவிட்-19 (கொரோனா வைரஸ்) உலகின் பல்வேறு நாடுகளையும் அச்சுறுத்திவருகிறது. மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தும், தலைநகர் டெல்லிக்கே கொரோனா வைரஸ் வந்திறங்கியுள்ளது. இது ஒட்டுமொத்த இந்தியாவை அதிர்ச்சியாக்கியுள்ளது.

மற்றவர்களுக்கும் பரவாமல் இருக்க மருத்துவ, சுகாதார நடவடிக்கைகளை மத்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது. அந்தந்த மாநில அரசுகளும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. அண்டை மாநிலமான தெலங்கானாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், தமிழ்நாட்டிலும் சுகாதாரத் துறை அலுவலர்கள் முழூமூச்சாக இறங்கி வேலைசெய்துவருகின்றனர். இத்தகைய சூழலில் பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி நமது ஈடிவி பாரத்திற்கு சிறப்புப் பேட்டியளித்துள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது:

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் வராமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்தியா முழுவதும் உள்ள 27 விமான நிலையங்களில் சீனா, ஹாங்காங், இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் பயணிகள் பரிசோதனை செய்யப்படுகிறார்கள்.

தமிழ்நாட்டில் சென்னை, திருச்சிராப்பள்ளி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய நான்கு விமான நிலையங்களில் கொரோனா வைரஸ் பாதித்த நாடுகளிலிருந்து வரும் பயணிகளைப் பரிசோதனை செய்கிறோம். கொரோனா வைரஸ் அறிகுறிகள் காணப்பட்டால் அவர்களின் ரத்தம் உடனடியாகப் பரிசோதனை செய்யப்படுகிறது.

குழந்தைசாமி பேட்டி

மேலும் அவர்களை அரசு மருத்துவமனைகளில் தனி வார்டில் வைத்து சிகிச்சையளித்துவருகிறோம். இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். 54 பயணிகளின் ரத்தம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களில் யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனையில் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் இதற்கான தனி வார்டுகள் தொடங்குவதற்கு தலைமைச் செயலர் மூலம் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

குழந்தைசாமி பேட்டி

சளி, இருமல் போன்றவை இருந்தால் கைக்குட்டையைப் பயன்படுத்தி இரும வேண்டும். சுகாதாரத் துறையின் அறிவுரையின்படி கைகளை நன்றாக சோப்பு போட்டும் கழுவ வேண்டும். வெளியில் சென்றுவந்தால் கைகளை நன்றாகக் கழுவுவது நல்லது. நமது கைப்படும் இடங்களில் நன்றாகச் சுத்தம்செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இதுபோன்ற முறைகளைக் கடைப்பிடித்தாலே கொரோனா வைரஸ் பரவாது.

இந்த வைரஸால் இறப்பு விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது. இதற்கான மருந்துகள் இல்லை என்பது தவறானது. மருந்துகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது. இதனைக் கண்டு யாரும் அஞ்ச வேண்டாம். குளிர்சாதன அறையை விட சாதாரண காற்று உள்ள அறையில் இருந்தால் இந்தக் கிருமிகளின் தாக்கம் குறைவாகத்தான் இருக்கும்.

குழந்தைசாமி பேட்டி

வெயிலின் தாக்கத்தில் வைரஸ் கிருமி பரவாது. எல்லா வைரஸ் நோய்களும் முதலில் விலங்குகளிடமிருந்து மனிதருக்குப் பரவும். மனிதரிடமிருந்துதான் வேறு மனிதருக்குப் பரவும். அதேபோல்தான் இந்த வைரஸும் தற்போது பரவிவருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் பரவவில்லை.

வெளிநாடுகளுக்குப் பயணம் சென்று வந்தவர்களுக்குத்தான் பரவியுள்ளது. அவர்களும் தற்பொழுது குணமடைந்துள்ளனர். விமான நிலையங்களில் பரிசோதனை செய்யும்பொழுது இல்லாமல் இருந்தாலும், 14 நாள்கள் கழித்து இந்த வைரஸ் மீண்டும் தாக்கலாம்.

குழந்தைசாமி பேட்டி

ஆகவே, 28 நாள்கள் அனைவரும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகின்றனர். கொரோனா வைரஸ் கோழிக்கறியிலிருந்து பரவுகிறது எனக் கூறுவது தவறு. கோழி கறிக்கும் இந்த வைரஸுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நன்கு வேகவைத்த உணவை உண்ணலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: ‘கொரோனா வைரஸ் நம் வாசற்படியில்தான் உள்ளது’

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.