ETV Bharat / state

மழையால் தேங்கிய நீரில் மூழ்கிய 2000 வீடுகள்!

சென்னை: கொரட்டூரில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பிலுள்ள சுமார் 2000 வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Public faces the problem by Rain Water
Public faces the problem by Rain Water
author img

By

Published : Dec 3, 2019, 9:44 AM IST

கடந்த சில நாட்களாக பெய்துவரும் வடகிழக்கு பருவமழையால் சென்னை புறநகர் பகுதியில் மழைநீரோடு கழிவுநீரும் கலந்து சாலை எங்கும் தேங்கி பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. கொரட்டூர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சுமார் 2000 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது.

மழையால் தேங்கிய நீரில் மூழ்கிய வீடுகள்

கடந்த இரண்டு நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் குடியிருப்பில் வசிப்பவர்கள் குழந்தைகளோடு உறங்க முடியாமலும், சமைக்க முடியாமலும் உறவினர்கள் வீடுகளுக்குள் தஞ்சம் அடைந்துள்ளதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும் அந்த பகுதியில் ஏற்கனவே யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உடல்நலம் குன்றியவர்கள், வயதானவர்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளானர். இதனால் சென்னை பெருமாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் குற்றச்சாட்டு

இதுகுறித்து பொதுமக்களிடம் பேசுகையில், சென்னை மாநகராட்சியிலேயே அதிகப்படியான வரி வசூல் செய்யப்படுவது இந்த பகுதியில் தான். ஆனால் இதுவரை தண்ணீரை வெளியேற்றவோ, பொதுமக்களை பார்வையிடவோ ஒரு அரசு அலுவலர்களும் வரவில்லை. எனவே அரசு நிர்வாகம் விரைவாக தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை வேண்டும் எனக் கூறினர்.

இதையும் படிங்க: உத்தரகாண்டில் வெள்ளம்: அடித்துச்செல்லப்பட்ட வீடுகள்!

Intro:சென்னை கொரட்டூரில் வீட்டுவசதி வாரியம் குடியிருப்பில் சுமார் 2000 வீடுகளுக்குள் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.Body:சென்னை கொரட்டூரில் வீட்டுவசதி வாரியம் குடியிருப்பில் சுமார் 2000 வீடுகளுக்குள் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்துவரும் வடகிழக்கு பருவமழையால் சென்னை புறநகர் பகுதியில் மழநீரோடு கழிவுநீரும் கலந்து சாலை எங்கும் தேங்கி பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. கொரட்டூர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் குடியிருப்பு பகுதிகளில் சுமார் 2000 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. அதனால் இரண்டு நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் குடியிருப்பு வாசிகள் குழந்தைகளோடு உறங்க முடியாமலும், சமைக்க முடியாமலும் உறவினர்கள் வீடுகளுக்குள் தஞ்சம் அடைந்துள்ளதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும் அந்த பகுதியில் ஏற்கனவே யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உடல்நலம் குன்றியவர்கள், வயதானவர்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகி வருவதாக கூறுகின்றனர். சென்னை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.