ETV Bharat / state

வெளிமாநிலத் தொழிலாளருக்கு அடிப்படை வசதிகள் செய்து தர அரசுக்கு உத்தரவு! - சென்னை செய்திகள்

சென்னை: தமிழ்நாட்டில் தவிக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்
author img

By

Published : Jun 3, 2020, 7:09 PM IST

கரோனா ஊரடங்கு காரணமாக, மகாராஷ்டிரா மாநிலம், சங்லி மாவட்டத்தில் உள்ள குப்வாட் கிராமத்தில் சிக்கியுள்ள கணேசன் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்கக் கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, வெளிமாநிலங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றனவா என்பதை அறிந்துகொள்ள இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தையும், தமிழ்நாடு தலைமைச் செயலாளரையும் எதிர்மனுதாரர்களாகச் சேர்த்து உத்தரவிட்டது.

வெளிமாநிலத் தொழிலாளர்களின் நிலையை ஊடகங்களில் பார்க்கும் எவராலும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், ஊரடங்கு அறிவித்த நாள் முதல் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நாடு முழுவதும் ஆங்காங்கே சிக்கித்தவித்து வருவதாகக் கூறியுள்ளனர்.

வேலைவாய்ப்பை இழந்து, உணவு, உறைவிடம் இல்லாததால் குழந்தைகளுடன் நடைபயணமாகச் சொந்த ஊர்களை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளதாகவும், அவ்வாறு செல்பவர்கள் வழியிலேயே பட்டினியிலும், விபத்துக்களிலும் உயிரிழந்து வருவதாகவும் வேதனை தெரிவித்த நீதிபதிகள், அவர்களை அரசு அலுவலர்கள் புறக்கணித்து விட்டதாகவும் அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள குடிபெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு?, ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர்? உள்ளிட்ட விவரங்கள் குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் வழக்கு இன்று (ஜூன் 3ஆம் தேதி) மீண்டும் விசாரணைக்கு வந்தது .

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தொழிலாளர்களுக்கு உரிய உணவு கூட வழங்கப்படவில்லை என்றும், எந்த அடிப்படை வசதிகள் இல்லாமல் ரயில் நிலையங்களில் அவர்கள் தவித்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து தமிழ்நாடு அரசு சார்பில் அறிக்கை அளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தமிழ்நாட்டில் தவிக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உறைவிடம், உணவு உள்ளிட்ட வசதிகளை உடனடியாகச் செய்து தர வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.