சென்னை மாநகராட்சி குப்பை லாரி ஓட்டுநர் அதிவேகமாக லாரியை ஓட்டிவந்ததாக போக்குவரத்து காவல் துறையினர் வாக்குப்பதிவு செய்துள்ளனர். இதனைக் கண்டித்து செங்கொடி சங்கத்தினர் அண்ணா சாலையில் உள்ள போக்குவரத்து காவல் நிலையத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டக்காரர்கள் காவலர்களைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் செங்கொடி சங்கத் தலைவர் மகேந்திரன் தெரிவித்ததாவது, "மாநகராட்சி குப்பை வண்டிகளில் வேகக்கட்டுப்பாட்டு கருவி உள்ளது. அதுமட்டுமின்றி மாநகராட்சி வண்டிகள் வேகமாகச் செல்ல முடியாது. ஆனால் வேகமாகச் சென்றுள்ளது என 15 நாட்களுக்கு முன்பு குப்பை லாரி ஓட்டுநர் மீது பொய்யாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனைக் கண்டித்து இன்று (நவ.7) போராட்டம் நடைபெற்றது. துணை ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முகக் கவசம் அணியவில்லை: கேள்வி கேட்ட காவலரை காரில் இழுத்துச் சென்றவர் கைது!