ETV Bharat / state

சென்னை மாநகராட்சியை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்! - etv tamil news

புளியந்தோப்பை சேர்ந்த கர்ப்பிணி பெண் மருத்துவமனையில் இறந்ததற்கு நீதி கேட்டு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ( Marxist Communist Party) இன்று போராட்டம் நடத்தினர்.

marxist communist party
சென்னை மாநகராட்சியை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்
author img

By

Published : Aug 17, 2023, 7:18 PM IST

சென்னை: இது குறித்து இக்கட்சியின் சார்பில் வெளியிட்ட அறிக்கையில்,“பெருநகர சென்னை மாநகராட்சி புளியந்தோப்பு சமுதாய நல மருத்துவமனையில் உரிய மருத்துவர்கள் இல்லாததாலும், முறையான சிகிச்சை அளிக்காத காரணத்தினாலும், 06.04.2023ம் தேதி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கே.பி.பார்க் குடியிருப்பை சேர்ந்த ம.கோட்டீஸ்வரன் மனைவி ஜனகவள்ளி (வயது 28) இறந்துள்ளார். இதுகுறித்து மாநகராட்சி ஆணையரிடம் 17.04.2023ம் தேதி நேரிடையாக மனு அளித்த போது, ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது.

பெருநகர சென்னை மாநகராட்சி, 59வது வட்டம், பல்லவன் சாலை, இந்திரா நகர் பகுதியை சார்ந்த நடராஜன் மகன் கனகராஜ் (வயது 37) 13:04 2023ம் தேதி சேப்பாக்கம் மசூதி தெருவில் பெருநகர சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர் வழியாக மேற்கொண்டு வரும் மழைநீர் கால்வாய் பணியில் ஈடுபட்டுள்ளார். தண்ணீர் தேங்கியிருந்த கால்வாயின் ஒரு மேன்ஹோல் வழியாக சுமார் மூன்று அடி தூரம் உள்ளே சென்று மற்றொரு மேன்ஹோலில் பொருத்தப்பட்டிருந்த மரப்பலகைகளை மின்சார இணைப்புக் கொண்ட கட்டிங் மிஷின் மூலம் எடுக்க தொடங்கியிருக்கிறார்.

அச்சமயம், வலது கையில் பிடித்துக் கொண்டிருந்த கட்டிங் மிஷின் கனகராஜின் இடது கையில் பட்டு பலத்த காயம் ஏற்பட்டும், மின்சாரம் பாய்ந்தும் உயிரிழந்ததாக தெரிய வருகிறது. இதுபற்றி மாநகராட்சி ஆணையரிடம் 17.04.2023ம் தேதி நேரிடையாக தெரிவிக்கப்பட்டது. அப்போது ஆணையர் “நமக்கு இதுகுறித்து எவ்விதமான தகவலும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை" எனத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து “இப்பிரச்னை குறித்து 24.04.2023ம் தேதி விரிவான மனுவையும் ஆணையர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது. இந்த இரண்டு மரணத்திற்கு விளக்கம் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்னாள் சென்னை மாநகராட்சி ஆணையரான ககன் தீப் சிங் பேடியிடம் மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து, புதிய ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் மனு கொடுத்தனர். இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார். கடந்த ஐந்து முறை மனு கொடுத்து எந்த நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், இன்று இக்கட்சியின் சார்பில் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் போராட்டம் நடைபெற்றது." என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென சென்னை மாநகராட்சி ஆணையரை சந்திக்க வேண்டும் எனக் கூறி மாநகராட்சி அலுவலகத்திற்கு உள்ளே நுழைந்தனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் போராட்டக்காரர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இடையே சென்னை மாநகராட்சி அதிகாரி பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இருசக்கர வாகனத்தில் வந்து சைக்கிள் திருட்டு - சிசிடிவி கேமராவில் சிக்கிய நபர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.