பட்டியலின மக்களை தரக்குறைவாகப் பேசியதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். அதையடுத்து அவருக்கு எழும்பூர் நீதிபதி பிணை வழங்கி உத்தரவிட்டார்.
இதற்கிடையில் நீதிபதி குடியிருப்புக்குள் ஆர்.எஸ். பாரதியை அழைத்துச் சென்றபோது வெளியே சாலையில் கூடியிருந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ரவீந்திரன், ரங்கநாதன், ராஜா, வழக்கறிஞர் கிரிராஜன் உள்பட திமுக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனால் எழும்பூர் காவல் துறையினர் ஊரடங்கை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.எல்.ஏக்கள் உள்பட 96 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது பிரிவுகள் 143-சட்டவிரோதமாக கூடுதல், 269- உயிருக்கு ஆபத்தான தொற்றுநோயை பரப்பக்கூடிய கவனக்குறைவான செயலில் ஈடுபடுதல், 270-உயிருக்கு ஆபத்தான தொற்றுநோயை பரப்பக்கூடிய தீய எண்ணத்திலான செயலில் ஈடுபடுதல் ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: 'ஆர்.எஸ். பாரதியை கண்டிப்பதுதான் ஸ்டாலினுக்கு அழகு' - முதலமைச்சர் அறிவுரை