டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா, தற்போது தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதலுக்குப் பிறகு சட்டமாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள காட்டுமன்னார்கோயில், மேல்புவனகிரி, கீரப்பாளையம், பாரங்கிபேட்டை, குமாராட்சி வட்டாரக்கள், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, திருவரங்கம் கறம்பங்குடி வட்டாரங்கள் ஆகிய பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு எதிரான துத்தநாக உருக்காலை, இரும்புத் தாது, ஆலை, ஒருங்கிணைந்த எஃகு ஆலை, செம்பு உருக்காலை, விலங்கு எலும்பு, கொம்பு, பிற உடல் பாகங்கள் பதப்படுத்தல், தோல் பதனிடுதல், எண்ணெய், நிலக்கரி, மீத்தேன், இயற்கை எரிவாயு உள்ளிட்ட ஹைட்ரோகார்பன்கள் ஆகிய திட்டங்களைச் செயல்படுத்தக் கூடாது என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பார்க்க: சமூக வலைதளத்தில் சர்ச்சை கருத்து: மகிந்த ராஜபக்ச மகன் மன்னிப்பு