சென்னை: இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை செயலர் காகர்லா உஷா வெளியிட்ட அறிவிப்பில், பள்ளிக்கல்வியில் நிர்வாக ரீதியாக சில மாறுதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி கள்ளர் சீரமைப்பு நலத்துறை இணை இயக்குநர் சி.செல்வராஜ், தேர்வுத்துறை இணை இயக்குநராக மாறுதல் வழங்கப்படுகிறது.
தேர்வுத்துறை இணை இயக்குநர் பி.குமார், கள்ளர் சீரமைப்பு நலத்துறை இணை இயக்குநர் பொறுப்புக்கு மாற்றப்படுகிறார். இதுதவிர 3 மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு தரப்பட்டுள்ளது.
அதன்படி மதுரை மாவட்டக்கல்வி அதிகாரி பி.விஜயா, திருவாரூர் முதன்மைக் கல்வி அதிகாரியாகவும், சிவகாசி மாவட்டக்கல்வி அதிகாரி எ.முனியசாமி, நீலகிரி முதன்மைக்கல்வி அதிகாரியாகவும், வள்ளியூர் மாவட்டக்கல்வி அதிகாரி எஸ்.சுமதி, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் துணை இயக்குநராகவும் பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட இளைஞர் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்