ETV Bharat / state

சார்பதிவாளர்கள் அலுவலகங்களில் ஆவண எழுத்தர்கள் செல்ல தடைவிதிப்பு; அரசு அதிரடி நடவடிக்கை! - chennai news

தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர்கள் அலுவலகங்களில் ஆவண எழுத்தர்கள் மற்றும் இடைத்தரகர்கள் நுழைவதற்குத் தமிழக அரசு தடை விதித்துள்ளது.

Prohibition of document clerks in Registrars offices
சார்பதிவாளர்கள் அலுவலகங்களில் ஆவண எழுத்தர்கள் செல்ல தடைவிதிப்பு
author img

By

Published : Jun 24, 2023, 5:28 PM IST

சென்னை: தமிழகம் முழுவதும் அனைத்து பதிவுத் துறை அலுவலகங்களும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. இதனால் பதிவுத்துறையில் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணத் தொகை, ஆன்லைன் மூலம் செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 581 சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவண எழுத்தர்கள் மற்றும் இடைத்தரகர்களின் அத்துமீறல்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன.

இதனால் பத்திரப்பதிவுக்கு வரும் சொத்து விற்பவர்கள் மற்றும் வாங்குபவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக குற்றச்சாட்டுக்களும், புகார்களும் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் திருப்பூர் மாவட்டம், பல்லடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிந்த சார்பதிவாளர்கள் பிரவீனா மற்றும் ஈஸ்வரிக்கு எதிராக ஆவண எழுத்தர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து சார்பதிவாளர்கள் இருவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.

பதிவுத்துறை நடத்திய விசாரணையில், கோயில் நிலங்கள் மற்றும் பதிவு செய்ய முடியாத ஆவணங்களை சார்பதிவாளர்கள் பதிவுக்கு மறுத்ததால், ஆவண எழுத்தர்கள் அவர்களை மிரட்டும் தொனியில் போராட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்நிலையில், பதிவுத்துறையை மேம்படுத்த ‘ஸ்டார் 3.0’ என்னும் செயலி விரைவில் கொண்டு வரப்படும் என பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்திருந்தார்.

அதே நேரத்தில் பத்திரப்பதிவுக்கு லஞ்சம் கேட்டால் பதிவுத்துறை தலைவரிடம் புகார் தரலாம் எனவும்; பத்திரப் பதிவுக்கு வருபவர்கள் பணம் கொண்டுவரத் தேவையில்லை; ஏ.டி.எம் கார்டு மூலமே பதிவு கட்டணத்தை செலுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவண எழுத்தர்கள் மற்றும் இடைத்தரகர்கள் நுழையத் தடை விதிப்பதாக பதிவுத்துறை தலைவர் அனைத்து சார்பதிவாளர் அலுவலங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “அலுவலக நிமித்தமாக சார்பதிவாளரால் அழைக்கப்பட்டால் தவிர அலுவகத்திற்குள் ஆவணம் எழுதுபவர்கள் நுழையக்கூடாது என்ற விதியினை சார்பதிவாளர்கள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும். சார்பதிவாளர் அலுவலகங்களுக்குள் ஆவணம் எழுதுபவர்கள் மற்றும் இடைத்தரகர்களின் நடமாட்டம் தெரியவந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது ஆவண எழுத்தர்கள் உரிம விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

விதிமுறைகளை மீறுபவர்களது உரிமம் ரத்து செய்யப்படுவதோடு இதனைக் கண்காணிக்க தவறும் சார்பதிவாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். சார்பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்கள் அமர்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை, ஆவணம் எழுதுபவர்கள் பயன்படுத்தாமல் இருப்பதை சார்பதிவாளர்கள் உறுதி செய்ய வேண்டும். மாவட்டப்பதிவாளர்கள் மற்றும் மண்டல துணை பதிவுத்துறை தலைவர்கள், தங்களது திடீராய்வுகளின் போது இந்த செயல்பாடுகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். இதனை ஆவணம் எழுதுவோர் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நேரு ஸ்டேடியத்தில் வைத்தா அறுவை சிகிச்சை செய்ய முடியும்..? அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.