ETV Bharat / state

கள்ளச் சாராயம் தயாரிப்பவர்களை பிடிக்க மதுவிலக்கு அமலாக்கத்துறை உத்தரவு! - chennai news

கள்ளச் சாராயம் தயாரிக்க தரம் தாழ்ந்த வெல்லத்தை விற்பனை செய்யும் வியாபாரிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கக்கூறி மதுவிலக்கு அமலாக்கத்துறை காவல்துறையினருக்கு டி.ஜி.பி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கள்ளச் சாராயம் தயாரிப்பவர்களை பிடிக்க மதுவிலக்கு அமலாக்கத்துறை உத்தரவு!

author img

By

Published : Jun 10, 2021, 8:30 PM IST

கரோனா பரவல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் தளர்வுகளற்ற ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தளர்வுகளற்ற ஊரடங்கின் காரணமாக மதுபானக் கடைகள், டாஸ்மாக்கள் முழுவதும் மூடப்பட்டுள்ளன.

இதனைப் பயன்படுத்தி சமூக விரோதிகள் பலர் கள்ளச் சந்தையில் மதுபானம் விற்பனை செய்வதும், கள்ளச் சாராயம் காய்ச்சுவதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 15 நாள்களில் மட்டும் தடைசெய்யப்பட்ட கள்ளச் சாராயம் விற்பனை செய்ததற்காக 232 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், கள்ளச்சாராயம் விற்பனை செய்து கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தரம் தாழ்ந்த வெல்லத்தை கள்ளச்சாராயம் தயாரிக்க சில வியாபாரிகள் விற்பனை செய்வதாக தெரியவந்துள்ளது.

அதனடிப்படையில், மது தயாரிப்பு ஆலைகளுக்கு வெல்லத்தை விற்க உரிமம் பெற்ற வியாபாரிகளை கண்டறிந்து அவர்களின் பெயர் பட்டியலை தயாரித்து, விசாரணை நடத்தவும், தரம் தாழ்ந்த வெல்லத்தை கள்ளச்சாராயம் காய்ச்சும் சமூக விரோதிகளுக்கு விற்கும் வியாபாரிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவும் அமலாக்கத்துறை டி.ஜி.பி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையும் படிங்க: வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.