ETV Bharat / state

முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: ஊராட்சி, பேரூராட்சி தலைவர்களுக்கு புதிய உத்தரவு!

author img

By

Published : May 5, 2023, 7:18 AM IST

ஊராட்சி, பேரூராட்சிகளில் உள்ள பள்ளிகளில் விரிவுபடுத்தப்படும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு நன்கொடைகள் ரொக்கமாக வாங்க கூடாது உள்ளிட்ட முக்கிய வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

Program Co ordinating Officer ilam bhagwat IAS issued the guidelines to be followed in extending the Chief Ministers Breakfast Scheme
திட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் இளம்பகவத் ஐஏஎஸ்

சென்னை: தமிழ்நாட்டில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 2022 செப்டம்பர் 15ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளில் மதுரையில் தொடங்கி வைத்தார். இந்த காலை உணவுத் திட்டம், முதல் கட்டமாக 1,937 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், வரும் கல்வியாண்டு (2023 - 2024) முதல் தமிழ்நாட்டில் உள்ள 30 ஆயிரத்து 122 அரசுத் தொடக்கப்பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் 18 லட்சம் மாணவர்கள் பயன் அடையும் வகையில் விரிவுபடுத்துவத்ற்கு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் விரிவுபடுத்தப்பட உள்ள இந்த திட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் இளம்பகவத், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் வரும் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள 30 ஆயிரத்து 122 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரையிலும் பயிலும் 18 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் விரிவுப்படுத்தப்படும் எனவும், இதற்கான 500 கோடி நிதி ஒதுக்கீடு பட்ஜெட்டில் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் 14 லட்சத்து 21 ஆயிரத்து 873 குழந்தைகள் பயனடைவர். மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்தவர்கள் உணவை சமைத்து வழங்குவார்கள். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஊராட்சி மன்றத் தலைவர், பேரூராட்சி நகர்மன்ற தலைவர், பள்ளித் தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மைக்குழுவின் தலைவர் மற்றும் அதன் பிரதிநிதி, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உள்ளிட்ட குழு அமைக்கப்பட வேண்டும். அந்தப் பள்ளியில் உள்ள மதிய உணவு சமையற் கூடத்தை காலை உணவு சமைப்பதற்கான இடமாகவும் இறுதி செய்ய வேண்டும் அல்லது அந்த கிராமத்தில் உள்ள ஒரு கட்டிடத்தை ஒடுக்கீடு செய்ய வேண்டும்.

காலை உணவுத் திட்டத்திற்கு அரிசி, பருப்பு, எண்ணெய், சிறுதானிய வகைகள், கருப்பட்டி போன்ற உணவுப் பொருட்களை நன்காெடைகளாக பெறுவதற்கு ஊராட்சி மன்றத் தலைவரால் தானிய வங்கி அமைக்கப்பட வேண்டும். ஆனால் ரொக்க நன்கொடைகள் அனுமதிக்க கூடாது. அரிசி, சிறுதானிய வகைகள், பழங்கள், காய்கறிகள், பாத்திரங்கள், தட்டு மற்றும் டம்ளர் போன்றவைகள் தேவைப்படும் இடங்களில் ஊராட்சித் தலைவரால் வழங்கப்பட வேண்டும்.

மாணவர்களின் எண்ணிக்கை 10க்கு குறைவாக இருந்தால் அந்தப் பள்ளியில் தனி சமையலறையோ, உணவு விநியோகத்திற்கான கேரியரை தவிர இதர பாத்திரங்களை வாங்க வேண்டியதில்லை. மாணவர்கள் அதிகம் உள்ள பள்ளியில் இருந்து சமைத்து 10க்கும் குறைவாக மாணவர்கள் உள்ள பள்ளிக்கு வழங்க வேண்டும். அந்தப் பள்ளிகளை கண்டறிந்து மாணவர்கள் அதிகம் உள்ள பள்ளிகளுடன் இணைக்க வேண்டும்.

காலை உணவுத் திட்டத்தின் கீழ் ஈடுபடும் சுயஉதவிக் குழுக்கள் காலை 6 மணிக்கு பணிகளை துவங்கி சமையலை 8.15 மணிக்குள் முடித்திட வேண்டும். சமைத்த உணவை காலை 8.30 மணி முதல் 8.50 மணிக்குள் சூடாக வழங்க வேண்டும். சமையல் பாத்திரங்களை சுத்தம் செய்து காலை 9.30 மணிக்குள் பள்ளி சூழலுக்கு எந்தவித இடையூறும் விளைவிக்காமல் தேர்வு செய்யப்பட்ட மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் அந்தப் பள்ளி வளாகத்தினை விட்டு வெளியேற வேண்டும்.

சமைப்பதற்கு முன்னர் உணவுப் பொருட்களை அல்லது காய்கறிகளை வைத்திருப்பதற்கு சுய உதவிக்குழு உறுப்பினர்கள் செய்தித்தாள்களை பயன்படுத்தக் கூடாது. உணவு மூலப்பொருட்களான கோதுமை ரவா, சோளம் ரவா, சேமியா, பாசிப்பருப்பு, சிவப்பு மிளகாய், கடுகு, மிளகு, சிறுதானியங்கள் போன்ற தேவைப்படும் பொருட்களை கூட்டுறவுத்துறையின் மூலம் பெறப்பட வேண்டும். இந்தத் திட்டம் மொபைல் ஆப் மூலம் கண்காணிக்கப்படும். என பல்வேறு வழிகாட்டுதல்களைத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'ஆளுநர் ரவிக்கு அரசியலமைப்புச் சட்டம் தெரியவில்லை' - டி.கே.எஸ் இளங்கோவன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.