சென்னை, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பரவியல் நோய் துறை பேராசிரியர் சீனிவாசன் ஈடிவி பாரதத்திற்கு அளித்த பேட்டியில், "கரோனா தொற்று ஒன்று 2001ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவியது. அதே போல் தான் கரோனா தொற்று 2 சீனாவிலிருந்து பரவியுள்ளது. கரோனா தொற்று ஒன்று பரவும் தன்மை குறைவாகவும் நோய்த் தொற்றினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருந்தது.
தொற்று 60 விழுக்காடு வேகமாக பரவும்
ஆனால், கரோனா தொற்று 2 பரவும் வேகம் அதிகமாகும், இறப்பவர்கள் எண்ணிக்கை குறைவாகவும் உள்ளது. பிரிட்டனிலிருந்து கரோனா தொற்று இரண்டு தனது பரிணாமத்தில் சற்று மாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. பிறக்கும் குழந்தைகள் பெற்றோர்களை போன்றே இருப்பதில்லை. பிரிட்டனிலிருந்து வந்துள்ள தொற்று 60 விழுக்காடு வேகமாக பரவி வருகிறது.
பொதுமக்கள் தனிமனித பழக்கவழக்கங்களை கடைப்பிடித்தல் காற்றோட்டமான பகுதியில் இருத்தல், ஏசி போன்றவற்றின் பயன்பாட்டினை குறைத்தல், முகக்கவசம் அணிதல் போன்றவற்றை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். 2001ஆம் ஆண்டு வந்த சார்ஸ் கோவிட் வைரஸ் ஒன்று இறப்புகள் அதிகரித்ததால், அதன் பரவும் வேகம் குறைவாக இருந்தது. 2019ஆம் ஆண்டு வந்த சார்ஸ் கோவிட் 2 வைரஸ் பரவும் வேகம் அதிகமாக இருந்ததால், உலகம் முழுவதும் பெரும் தொற்று ஏற்பட்டது.
மக்கள் அச்சமடைய வேண்டாம்
சில நாடுகளில் மட்டுமே இந்த வைரஸ் தொற்று வந்ததால் எளிதில் கட்டுப்படுத்த முடிந்தது. இயற்கையாகவே இந்த வைரஸ் பரவும் வேகம் குறைவாகவே இருந்தது. ஆனால் 2019ஆம் ஆண்டு வந்துள்ள சார்ஸ் கோவிட் 2 வைரஸ் பரவும் வேகம் அதிகமாக உள்ளது. இருப்பு குறைவாக இருந்ததால் அதன் பரவும் வேகமும் இயற்கையாகவே அதிகமாக இருந்தது. 2001ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது தற்போது போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. வைரஸ் மாற்றமடைவது குறித்து பொதுமக்கள் எந்தவித அச்சமும் அடைய தேவையில்லை.
வைரஸ் உருவம் மாறினாலும், தகுந்த இடைவெளி மற்றும் முகக் கவசம் போன்ற பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றினால் அவற்றில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஹெல்மெட் அணிவது போல், முகக் கவசம் அணிந்தால் வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும். அதே நேரத்தில் வைரஸ் அதிகளவில் பரவினால் இறப்பு வீதம் அதிகரிக்க வாய்ப்புண்டு.
காற்று மூலம் பரவும் வைரஸ்
வைரஸ் தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கும். காற்று மூலம் பரவும் வைரஸ் உள்ளிட்ட நோய்களை கண்டறிவதற்கான விதியின் அடிப்படையில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் ஆராய்ச்சி மேற்கொண்டது. அதில் வைரஸ் தொற்று அக்டோபர் மாதம் அதிகரித்து குறையும் என கூறினோம் அதுபோன்றுதான் அமைந்துள்ளது" என்றார்.
இதையும் படிங்க: 'பணம் கேட்டால் மூக்கை உடைப்பார்கள், ஸ்டாலின் கட்டப்பஞ்சாயத்து செய்வார்' - முதலமைச்சர் பழனிசாமி