ETV Bharat / state

நன்னனின் நூல்கள் நாட்டுடைமையாக்கம்- குடும்பத்தாருக்கு நூலுரிமைத் தொகை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!

பேராசிரியர் முனைவர் மா. நன்னனின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவரின் மனைவி ந. பார்வதி அம்மாளிடம் நூலுரிமைத் தொகை ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வழங்கினார்.

பேராசிரியர் நன்னனின் நூல்கள் நாட்டுடைமையாக்கம்

author img

By

Published : Aug 14, 2023, 3:02 PM IST

சென்னை: தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவரவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை, சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 173 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு, அவர்தம் மரபுரிமையர்களுக்கு ரூ. 13.87 கோடி நூலுரிமைத் தொகை அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், முதலமைச்சராக பொறுப்பேற்ற நாளிலிருந்து இன்றுவரை, சிலம்பொலி சு. செல்லப்பன், முனைவர் தொ. பரமசிவன், புலவர் இளங்குமரனார், முருகேச பாகவதர், சங்கரவள்ளி நாயகம், புலவர் செ. இராசு, பேராசிரியர் க. அன்பழகன், முனைவர் நாவலர் இரா. நெடுஞ்செழியன், நெல்லை செ. திவான், விடுதலை இராஜேந்திரன், நா. மம்மது, நெல்லை கண்ணன், கந்தர்வன் (எ) நாகலிங்கம், சோம. லெட்சுமணன், முனைவர் ந. இராசையா, தஞ்சை பிரகாஷ் ஆகிய 16 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, 2 கோடியே 40 இலட்சம் ரூபாய் நூலுரிமைத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த ஜூலை 30ம் தேதி சென்னை, சர். பிட்டி தியாகராயர் கலைமன்றத்தில் நடைபெற்ற பேராசிரியர் மா. நன்னனின் நூற்றாண்டு நிறைவு விழாவில், “நன்னன் அவருடைய நூற்றாண்டை கொண்டாடும் இந்த நேரத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான் இருக்கின்ற காரணத்தால், அந்தப் பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன்.

தமிழ்நாடு அரசு சார்பில் நன்னனுக்கு புகழ் சேர்கிற வகையில், நன்னன் அவர்களின் புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நன்னன் அவர்களின் குடும்பத்தினரோ, உறவினர்களோ, வேறு யாரும் கோரிக்கைகளை இந்த நேரத்தில் வைக்கவில்லை. யாரும் வைக்காமல் இந்த கோரிக்கையை நான் அறிவிக்கிறேன் என்று சொன்னால், நன்னன் குடியில் நானும் ஒருவன் என்ற அடிப்படையில், இந்த அறிவிப்பை செய்திருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

அதற்கிணங்க, பேராசிரியர் முனைவர் மா. நன்னன் எழுதிய நூல்கள், கருத்துக் கருவூலங்கள் உலக மக்களை எளிதில் சென்றடையும் வகையில், அவரின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவரது துணைவியார் ந. பார்வதி அம்மாள் அவர்களுக்கு நூலுரிமை பரிவுத் தொகையான ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை இன்று (ஆகஸ்ட் 14) சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்வின்போது, மா. நன்னனின் மகள் அவ்வை, முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து வாழ்த்தும் வகையில்,

"நிறை வாழ்வு வாழ்ந்த நன்னனுக்கு
நான் வந்து வாழ்த்துகிறேன் என்று
நிறைவான விழாவாக்கிய முதல்வரே" என்ற கவிதையின் மூலம் நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மரு. இரா. செல்வராஜ், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் ஔவை அருள், பேராசிரியர் முனைவர் மா. நன்னனின் மகள்கள் வேண்மாள், அவ்வை மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: "சில மாதங்களில் நீட் தடுப்புச் சுவர் உதிர்ந்து விழும்; இருவரது மரணமே இறுதியாக இருக்கட்டும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.