குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் இருக்கும் தங்களின் இரு மகள்களை மீட்டுத் தருமாறு ஜனார்த்தனா சர்மா என்பவர், அளித்துள்ள விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில், நித்யானந்தாவைக் கைது செய்ய வலியுறுத்தி, அகமதாபாத் சென்று அங்குள்ள காவல் ஆணையரை சந்தித்தப் பின், மன்னார்குடி ஸ்ரீ செண்டலங்கார செண்பகமன்னார் ராமானுஜ ஜீயர் இன்று சென்னை திரும்பினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'கர்நாடகாவில் தப்பிய நித்யானந்தா குஜராத்தில் ஆசிரமத்தில் பதுங்கிய நிலையில் மடாதிபதிகள், ஜீயர்கள் மட்டும் அல்லாமல் அனைத்து இந்துக்களுக்கும் அவமானம் ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளார். கர்நாடகாவில் மீண்டும் நுழைய முடியாமல், இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் நேபாளம் வழியாக அவர் வெளிநாடு சென்றதாகத் தெரிகிறது. அவர் விரைவில் தேசத்துரோக வழக்கில் கைதுசெய்யப்படுவார்' என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், 'விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இந்துக்களுக்கு எதிராக பேசி வருவது கண்டனத்திற்குரியது. இந்து, இஸ்லாமியர்கள் ஒற்றுமைப்பட்டு இருக்கும், இந்த வேளையில் அதை சகித்துக் கொள்ளாமல் வேறுபாடு ஏற்படுத்தி கலங்கம் கொண்டுவர இந்துக்களுக்கு எதிராக திருமாவளவன் பேசி வருகிறார்' என்று தெரிவித்துள்ளார்.
'திருக்குறளை தேசிய நூலாக மாத்துங்க' - குஜராத்தில் இருந்து எழுந்த குரல்