ETV Bharat / state

தானியங்கி முறையில் பட்டா மாறுதல்

author img

By

Published : Sep 1, 2021, 6:37 AM IST

பட்டா மாறுதல்களை தானியங்கி வாயிலாக மேற்கொள்ள வழிவகை செய்யப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

procedure-for-changing-the-patta-automatically-said-policy-note
தானியங்கி முறையில் பட்டா மாறுதல்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (ஆக.31) வருவாய் துறை, தொழில் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.

தானியங்கி பட்டா மாறுதல் முறை உட்பிரிவு செய்ய வேண்டிய தேவை இல்லாத நிலப் பரிவர்த்தனைகளுக்கான நிலஉரிமை மாற்றங்களை தானியங்கியாக நில ஆவணங்களில் மேற்கொள்ள தானியங்கி பட்டா மாறுதல் திட்டம் வழிவகை செய்வதாக கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இத்திட்டத்தின் கீழ் பத்திரப்பதிவு செய்யப்பட்டவுடன், குறிப்பிட்ட சில நிபந்தனைகளை நிறைவு செய்வதன் அடிப்படையில் தானியங்கி பட்டா மாறுதல் செய்யப்பட வேண்டிய நிலை பரிவர்த்தனைகள் பதிவுத்துறை அலுவலர்களால் தெரிவு செய்யப்படுவதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.

அந்த வகையில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கடந்த ஆக்ஸ்ட் 28ஆம் தேதி வரையில் 43 ஆயிரத்து 680 பட்டா மாறுதல்கள் தானியங்கி முறையில் வழங்கப்பட்டிருப்பதாகவும், இதனை மேலும் செம்மைப் படுத்தி அதிக எண்ணிக்கையிலான பட்டா மாறுதல்களை தானியங்கியாக மேற்கொள்ள வழிவகை செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: இழப்பீடு தொகை 2 மாதத்திற்குள் கிடைக்க நடவடிக்கை- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.