ETV Bharat / state

மாமன்ற உறுப்பினர்களின் கணவர்கள் தவறு செய்தால் கடும் நடவடிக்கை - சென்னை மேயர் பிரியா ராஜன் - மாமன்ற உறுப்பினர்களின் கணவர்கள் தவறு செய்தால் கடும் நடவடிக்கை

பெண் மாமன்ற உறுப்பினர்களின் கணவர்கள் தவறு செய்தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

action against husband of councilors  priya rajan press meet  chennai mayor priya rajan  பிரியா ராஜன்  மாமன்ற உறுப்பினர்களின் கணவர்கள் தவறு செய்தால் கடும் நடவடிக்கை  சென்னை மேயர் பிரியா ராஜன்
சென்னை மேயர் பிரியா ராஜன்
author img

By

Published : Apr 1, 2022, 6:21 PM IST

சென்னை: உலக வங்கியின் உதவியுடன் செயல்படுத்தப்படும் 'சென்னை மாநகர கூட்டமைப்புத் திட்டம்' மற்றும் இந்திய அரசின் 'நிர்பயா திட்டத்தின்' கீழ், பெருநகர சென்னை மாநகராட்சியில், தமிழ்நாடு அரசின் மூலம் “பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகம்” (Gender and Policy Lab) உருவாக்கப்பட்டுள்ளது. இதனை சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா திறந்துவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி ஆணையர், மற்றும் காவல்துறை ஆணையர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதனைத்தொடர்ந்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

பெண்களின் பாதுகாப்பு: அப்போது பேசிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், '’பெருநகர சென்னை மாநகராட்சி அம்மா மாளிகையில் 'பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகம்' தொடங்கப்பட்டுள்ளது. இது பெண்களின் பாதுகாப்பிற்காகவும், அவர்கள் மேற்கொள்ளும் பிரச்னைகளைtத் தடுப்பதற்காகவும் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்தை முதற்கட்டமாக, மண்டலம் 4 மற்றும் 5இல் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

சுரங்க நடைபாதைகளில் அதிகளவு தெரு விளக்குகள் இல்லாததால், விளக்குகள் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக ரூ.69 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க பெண்களின் பாதுகாப்பிற்காக இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பிற்காக பள்ளி, கல்லூரிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. இதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கானப் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

கடும் நடவடிக்கை: பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் வெளியில் வரும் பெண்கள், கழிப்பிட வசதிகள் இல்லாமல் அவதிப்படும் சூழ்நிலை உள்ளது. இதனை சரி செய்வதற்காக ரூ.33 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அமைக்கப்படும் கழிப்பறைகள் மிகவும் பாதுகாப்பானதாகவும், நவீன முறையிலும் இருக்கும். அதனைப் பராமரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மொபைல் டாய்லெட் வசதியை ஏற்படுத்துவதற்காக ரூ.5.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம், என்எஸ்சி போஸ் ரோடு மற்றும் சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் மொபைல் டாய்லெட் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலவச கழிப்பிடங்களில் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

யாருக்கு பொறுப்பு வழங்கப்பட்டதோ, அவர்கள் தான் அந்தப் பணியை செய்ய வேண்டும். யார் கவுன்சிலரோ அவர்கள் அந்த பணியை செய்ய வேண்டும். அதை மீறி யாரேனும் தவறாக அவர்களைப் பயன்படுத்தினாலோ அல்லது அவர்களின் கணவர்கள் அவர்களை தவறாக வழிநடத்தினாலோ அவர்கள் மீது தலைமை கடுமையான நடவடிக்கை எடுக்கும். கவுன்சிலர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அவர்களது பணி என்ன என்பது தெரியும்' எனத் தெரிவித்தார்.

குறைந்த குற்றங்கள்: இதைத் தொடர்ந்து பேசிய சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், “சென்னை மாநகரில் அதிக அளவு குற்றங்கள் தற்போது நடைபெறுவதில்லை. சில இடங்களில் நடைபெறும் சம்பவங்களை விரைந்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் சென்னையில் குற்றங்களின் எண்ணிக்கை 25 விழுக்காடாக குறைந்து இருக்கிறது.

சென்னையில் அதிகளவு போதைப் பொருட்களை கைப்பற்றி நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆந்திரா, நெல்லூர், மத்தியப் பிரதேஷம் போன்ற பகுதிகளுக்குச் சென்று போதைப்பொருட்களை சப்ளை செய்யும் நபர்களை கைது செய்துள்ளோம். பள்ளி, கல்லூரிகளின் அருகில் போதைப்பொருட்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒரு சிலப் பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்கள் போதைப்பொருட்களுக்கு ஆளாகின்றனர். அதை நாம் கண்காணித்து வருகிறோம். அவர்கள் இல்லங்களின் அருகில் இது நடப்பதால், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 240 பகுதி பள்ளிகளில் இதுவரை போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வை வழங்கி வருகின்றோம்.

சென்னையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை சரி செய்வதற்காக ரூ. 1.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 1.30 கோடி ரூபாய் செலவில் 5 ஆயிரம் புதிய கேமராக்கள் பயன்படுத்துவதற்கும் நிர்பயா திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மாநில அரசிற்கு கூடுதல் செலவு ஆகிறது; ஜிஎஸ்டி நிலுவைத்தொகையை விரைந்து தாருங்கள் - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் முதலமைச்சர் மனு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.