ETV Bharat / state

ஆன்லைன் வகுப்பு தடையை நீக்க தனியார் பள்ளிகள் கோரிக்கை - education news

சென்னை: ஆன்லைன் வகுப்பு எடுப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தனியார் பள்ளிகள் கோரிக்கை
தனியார் பள்ளிகள் கோரிக்கை
author img

By

Published : May 27, 2020, 6:55 PM IST

இது தொடர்பாக தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை, சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் நந்தகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், "பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று(மே 27) செய்தியாளர்களைச் சந்தித்து தனியார் பள்ளிகள் இணையதள வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற செய்திக்கு தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்களின் சார்பில் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் தனது கடும் கண்டனத்தை பதிவு செய்கின்றோம்.

60 நாட்களுக்கும் மேலாக தமிழ்நாடு பள்ளிக்கல்வி மாணவர்கள் கரோனா எனும் கொடிய நோய், ஊரடங்கு காரணமாக வீட்டுச் சிறையில் முடங்கி இருக்கிறார்கள். இந்நிலையில், படித்ததை மறந்து விட்டார்கள் கற்பதை நிறுத்திக் கொண்டார்கள். அதை மீட்டெடுப்பதற்காக தனியார் பள்ளிகள் பெற்றோரிடமோ, மாணவரிடமோ எந்தவித கல்விக் கட்டணமும் பெறாமல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தி வருகின்றன.

இதற்கு முன் கல்வி அமைச்சர் ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம் என்று சொல்லியிருக்கிறார். உயர் நீதிமன்றங்கள் ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம் என்று சொல்லியிருக்கிறது. அதற்கான கட்டணம் கூட பெற்றுக் கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறது. மத்திய அரசின் சிபிஎஸ்இ கல்வி வாரியம் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கு ஊக்குவித்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இன்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பத்திரிகையாளர் சந்திப்பில், தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுப்பதாக எச்சரிக்கை விடுத்திருப்பது மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பள்ளி நிர்வாகிகள் பொதுமக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடிப்பதற்கு தடையில்லாமல் படிப்பதற்குத் தடை போட்ட ஒரே அரசு தமிழ்நாடு அரசாகத்தான் இருக்கும்.

அறிக்கை
அறிக்கை

நாடெல்லாம் டாஸ்மாக் கடைகளை திறந்துவிட்டு கல்வி கோயிலை மட்டும் திறக்காமல் தடை போட்டு விட்டு பலமுறை தேர்வுகளை தள்ளிப்போட்டு படிப்பதற்கும் தேர்வுக்கு தடை போட்டு பள்ளிகளுக்கு சீல் வைக்கும் அவல நிலையில் தமிழ்நாடு உள்ளதைக் கண்டு வெட்கப்படுகிறோம்.

இந்த நிலை மாற்றப்பட வேண்டும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரே பரிசீலியுங்கள் ஆன்லைன் பயிற்சி தருவதால் அரசுக்கு ஒரு பைசா கூட நஷ்டமில்லை. தனியார் பள்ளி நிர்வாகிகள் அதற்காக எந்த வித கட்டணமும் யாரிடமும் கேட்பதில்லை. மன உளைச்சலில் இருக்கக்கூடிய மாணவனுக்கு ஒரு மாற்றத்தை தந்து கல்வி கற்பதை உறுதி செய்கின்றோம்.

நீங்களும் நன்றாக முயற்சித்து அரசுப்பள்ளி மேம்படுத்தினால் நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. எத்தனை நாள் தான் எங்களை எடுப்பார் கைப்பிள்ளையாக மூன்றாம் தர குடிமக்களாக நடத்துவீர்கள் என்ற வேதனைகளை எங்கள் பள்ளி நிர்வாகிகள் வெளிப்படுத்துகிறார்கள்.

எங்கள் கோரிக்கைகளை பரிசீலித்து ஆன்லைன் பயிற்சிகள் நடத்தக்கூடாது எனும் தடை உத்தரவை திரும்பப் பெற வேண்டும். இல்லை என்றால், தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் இணைந்து மாபெரும் போராட்டத்திற்கு தயாராக வேண்டிய சூழலை தயவுசெய்து உருவாக்கி விடவேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பும் 179 பாகிஸ்தானியர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.