ETV Bharat / state

தனியார் பள்ளிகளுக்கும் பாதுகாப்புச்சட்டம் தேவை - தனியார் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தல்! - School girl dead case

தனியார் பள்ளிகளுக்கும் மருத்துவமனைகளுக்கான பாதுகாப்புச்சட்டம்போல் விதிகளை உருவாக்கிட வேண்டும் என தனியார் பள்ளிகள் சங்கங்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர்களைச் சந்தித்த தனியார் பள்ளிகள் சங்கம்

author img

By

Published : Jul 18, 2022, 10:35 PM IST

சென்னை: தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக அதன் நிர்வாகி இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் இயங்கிவரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி பயின்று வந்தவர் 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி. இவர் கடந்த 13ஆம் தேதி பள்ளியின் விடுதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

புலன் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் 17ஆம் தேதி பெற்றோர் என்ற போர்வையில் பள்ளிக்குள் சில சமூக விரோத கும்பல் அத்துமீறி நுழைந்து, பள்ளியின் மீது ஏற்கெனவே இருந்த காழ்ப்புணர்ச்சியால் பள்ளியின் பாதுகாப்புக்கு வந்த காவல் துறையினரை கல்வீசித்தாக்கி மற்றும் காவல் துறை வாகனங்களை தீ வைத்து கொளுத்தியும் பள்ளியின் உடைமைகளை கட்டடம் தவிர மற்ற அனைத்து உடைமைகளையும் (மாணவர்கள் சான்றிதழ் உள்பட) கடுமையாக சேதப்படுத்தி வன்முறையில் ஈடுபட்டது நேரடியாக தெள்ளத்தெளிவாக காட்டப்பட்டது.

இதுகுறித்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பாக அனைத்து தனியார் பள்ளிகள் சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று (ஜூலை 18) ஒருநாள் மட்டும் அனைத்து தனியார் சுயநிதி பள்ளிகளை மூடி சமூக விரோத கும்பலைக் கைது செய்யக் கோரியும் அனைத்து தனியார் பள்ளிகளுக்குப் பாதுகாப்பு கோரியும் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் இன்று 60 விழுக்காட்டிற்கும் மேல் பள்ளிகள் இயங்கவில்லை.

இதுகுறித்து மீண்டும் இன்று அனைத்து சங்க நிர்வாகிகள் சென்னையில் ஒன்றுகூடி பள்ளிகளுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்பது குறித்து ஆலோசனை செய்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர், பள்ளிக்கல்வி ஆணையரை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

அக்கோரிக்கையில் வருங்காலத்தில் எந்த கல்வி நிறுவனத்திலும் நடைபெறாத வகையில் பாதுகாப்பு விதிகளை உருவாக்கி பள்ளிகளுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோர் மீது மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வெளியிடப்பட்ட அரசாணை எண் 3 /2008-ன்படி தனியார் சுயநிதி பள்ளிகளுக்கும் அரசாணை வெளியிட வேண்டும் என்று கூறி இருந்தோம்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் சங்க நிர்வாகிகள் சந்தித்து பேசும்போது தங்களது கோரிக்கையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் கலந்து பேசி நல்ல முடிவு எடுப்பதாக உறுதியளித்தார். இதன் அடிப்படையில் நாளை முதல் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்” எனத் தொிவித்தார்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி இறப்பதற்கு முன் எழுதியதாக வைரலாகும் கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.