ETV Bharat / state

பள்ளிக் கட்டணத்தை உயர்த்தமாட்டோம்- தனியார் பள்ளிகள்! - private school fee not hike

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் இந்த ஆண்டு கட்டணத்தை உயர்த்தமாட்டோம் என தனியார் பள்ளிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் நந்தகுமார், பள்ளிக் கல்வித் துறை ஆணையருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கட்டணம்
பள்ளிக் கட்டணம்
author img

By

Published : May 19, 2020, 1:40 PM IST

தமிழ்நாடு நர்சரி பிரைமரி, மெட்ரிகுலேசன், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் நந்தகுமார் பள்ளிக் கல்வித் துறை ஆணையருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "கரோனா பரவும் இந்தச் சூழ்நிலையில் மாணவர்களின் நலன் கருதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, அவர்கள் படிக்கும் பள்ளியிலேயே தேர்வு எழுதும் வகையில் தேர்வு மையங்கள் அமைத்ததற்கு பள்ளிக் கல்வித் துறையை பாராட்டுகிறோம்.

பள்ளிக் கல்வி மேம்பட பள்ளிகள் திறப்பது சம்பந்தமாக சமூக பாதுகாப்போடு நோய் தொற்று ஏற்படாமல், எவ்வாறு பள்ளியை சிறப்பாக நடத்தலாம் என்று வல்லுநர் குழு வழங்கிவுள்ள ஆலோசனைகளும், தனியார் பள்ளிகளின் சார்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகளும்:

1. பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிந்தவுடன் மாணவர்கள் சேர்க்கையை நடத்தவும், அவர்களுக்கு தேவையான நோட்டுப்புத்தகங்களை வழங்கவும் ஜூன் மாதம் 15ஆம் தேதி முதல் 30 ஆம் தேதிவரை அனைத்து தனியார் பள்ளிகளையும் திறந்திட அனுமதி வழங்கிட வேண்டும்.

2.ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளை திறந்து கற்றல் கற்பித்தல் பணிகளை தொடர அனுமதிக்க வேண்டும். அப்போதும் இதேபோல் கரோனா நோய்த்தொற்று குறையாமல் இருந்தால் எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்புவரை ஒருநாளும், மறுநாள் ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்புவரை என, ஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளியை நடத்த அனுமதிக்க வேண்டும்.

3. முகக்கவசம், கை கவசம் ஆகிவற்றை மாணவர்கள் தங்களது வீட்டிலிருந்து அணிந்து கொண்டுவரலாம். பள்ளியில் நுழைந்தவுடன் சுகாதாரத்துடன் கூடிய சானிடைசர் வழங்கி கை கால்களை கழுவ வைத்து தகுந்த இடைவெளியுடன் ஒரு வகுப்பறையில் 10 முதல் 15 மாணவர்களை மட்டும் அமரவைத்து கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளை செய்யலாம்.

4. பள்ளி வாகனங்களில் ஒருநாள் விட்டு ஒருநாள் மாணவர்களை அழைத்து வரும்போது தகுந்த இடைவெளி கடைப்பிடிப்பதில் எந்த பிரச்னையும் வராது. வாகன வசதிகள் இல்லாத பல பள்ளிகளில், மாணவர்களின் பெற்றோர்களே கொண்டுவந்து பள்ளியில் விட்டு, மீண்டும் அழைத்துச் செல்லலாம்.

5.நோய்த் தொற்று அதிக பாதிப்பு உள்ள மாவட்டங்களில் பள்ளி திறப்பு குறித்து மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அந்தந்த மாவட்ட சூழ்நிலைக்கு ஏற்றபடி முடிவுகள் எடுத்துக் கொள்ளலாம்.

6. விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் படிக்கும் பள்ளி எந்த மாவட்டத்தில் எந்த நிலையில் உள்ளது என்பதை பெற்றோர்கள் அறிந்துகொண்டு அதற்கு ஏற்ப விடுதியின் சுற்றுப்புற சுகாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு பெற்றோர்கள், மாணவர்கள் விருப்பத்தின் பேரில் ரெசிடென்சியல் ஸ்கூல் விடுதிகளில் தங்கிப் படிக்கவும், மாணவர்கள் பள்ளியில் தகுந்த இடைவெளியோடு படிக்கவும், உண்ணவும், உறங்கவும் வாய்ப்புகளை உறுதிப்படுத்துவிட்டு பள்ளியை திறந்து கொள்ள அனுமதிக்க வேண்டும்.

7.பள்ளிக்கு வரும் மாணவர்களிடம் காய்ச்சல், இருமல், தொண்டை அடைப்பு ஆகியவை உள்ளதா என்று 15 நாள்களுக்கு ஒருமுறை பள்ளி நிர்வாகமே மருத்துவ பரிசோதனை செய்து பெற்றோர்களுக்கு தகவல் தந்து பாதுகாத்து தரமான கல்வியை உறுதி செய்ய வேண்டும்.

8.திறந்தவெளி விளையாட்டு மைதானம் கலையரங்கம் பெரிய வகுப்பறைகளில் மாணவர்களை தகுந்த இடைவெளியோடு அமரவைத்து குருகுல முறைப்படி ஆசிரியர்கள் குழுவோடு இணைந்து கற்பித்தலை உறுதி செய்வோம்.

9. தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் புத்தகங்களை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்குவது போல், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும்.

10. தனியார் பள்ளிகள் அனைத்தும் இந்த ஆண்டு கல்வி கட்டணத்தை உயர்த்துவது இல்லை என்று முடிவெடுத்து இருக்கின்றோம். எனவே தமிழ்நாடு அரசு தனியார் பள்ளிகளின் வாகனங்களை இந்த ஆண்டு எப்.சி. செய்யாமல் ஓட்டுவதற்கு அனுமதிக்க வேண்டும். அதற்காக தமிழ்நாடு போக்குவரத்து துறை தனி சிறப்பு அரசாணை வெளியிட வேண்டும்.

11. கடந்த காலங்களில் நிலவேம்பு கசாயத்தை வழங்கியதுபோல், கபசுர குடிநீரை அரசே 15 நாட்களுக்கு ஒரு முறை அந்தந்த பகுதி சுகாதார ஆய்வாளர்கள் கொண்டு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்" என அதில் கூறியுள்ளார்.

இதையும் பார்க்க: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.