ETV Bharat / state

‘தற்கொலை செய்துகொள்ளும் நிலையில் தனியார் பள்ளி நிர்வாகிகள்’

சென்னை: தனியார் பள்ளி நிர்வாகிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் இருக்கிறோம் என தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நந்தகுமார் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

நந்தகுமார்
நந்தகுமார்
author img

By

Published : Jun 22, 2020, 3:51 PM IST

இதுகுறித்து அவர் கூறுகையில், “மார்ச் 17ஆம் தேதி முதல் தமிழ்நாடு தனியார் மற்றும் அரசு பள்ளிகள் இயங்காமல் மூடியிருக்கிறது. ஊரடங்கு முடிந்த பின்பும் பள்ளி கல்லூரிகளை தவிர எல்லாம் இயங்கும் இந்தச் சூழலில் பள்ளிகள் மட்டும் திறக்காமல் புதிய பழைய மாணவர்களை சேர்க்காமல் புதிய பழைய கல்வி கட்டணத்தை வசூலிக்காமல் ஆசிரியருக்கு ஊதியம் தர முடியாமல் மின்கட்டணம் ,பள்ளி வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் சாலை வரி இருக்கை வரி கட்ட முடியாமல் ,வாங்கிய கடனுக்கு வட்டியும் தவணையும் கட்ட முடியாமல் தத்தளித்து வருகின்றோம்.எல்லாத் துறைக்கும் நலவாரியம் உள்ளது எங்கள் அப்பாவி ஆசிரிய பெருமக்களுக்கு எந்த நல வாரியமும் இல்லை.

எங்களாலும் சம்பளம் தொடர்ந்து வழங்க முடியவில்லை. நாங்கள் கற்பிப்பதற்கான நியாயமான கல்வி கட்டணம் எங்களுக்கு கிடைக்கவில்லை. பெற்றோர்களும் கல்வி கட்டணத்தை செலுத்தவில்லை. அதனால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றோம்.எப்பொழுது பள்ளியை திறப்போம் என்று தெரியாத இந்தச் சூழ்நிலையில் நாங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டப்படி 25% மாணவர்களை சேர்த்திட்ட வகையில் எங்களுக்கு அரசு தர வேண்டிய கல்வி கட்டண பாக்கியை இன்னும் நிலுவையில் உள்ளது.

தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நந்தகுமார்

மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு மட்டும் அரசு நிர்ணயித்த முழுமையான கட்டணத்தை வழங்கியுள்ளது.அதேவேளையில் மிகக் குறைந்த கட்டணத்தை பெற்று பல்வேறு சிரமங்களுக்கு இடையில் ஆரம்பக் கல்வியின் அடித்தளம் தொடக்கக் கல்வித் துறையில் உள்ள நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கு 2018- 19ஆம் ஆண்டுக்கு தர வேண்டிய கல்வி கட்டண பாக்கி இன்னும் 40% நிலுவையில் உள்ளது.

அது மட்டுமல்ல 2019-20ஆம் ஆண்டுக்குரிய கல்வி கட்டண பாக்கியை 100% அப்படியே நிலுவையில் உள்ளது. அதை உடனடியாக அனைத்து வகை பள்ளிகளுக்கும் வழங்கினால் மட்டும்தான் எங்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் தந்தாவது அவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியும். படித்து முடித்து பட்டம் பெற்று வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான தனியார் பள்ளியில் பணிபுரியும் திறமை வாய்ந்த நல்லாசிரிய சகோதர சகோதரிகளுக்கு அரசு வேலை கிடைக்கும்வரை தனியார் பள்ளி ஆசிரியர் நல வாரியம் அமைத்து நிவாரணம் வழங்கலாம் .

அவர்கள் வாழ்வாதாரம் பாதுகாப்பதற்காகவாவது நிலுவையிலுள்ள கல்வி கட்டணத்தை உடனே வழங்குங்கள்.எனவே காலம் தாழ்த்தாமல் உடனடியாக தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய ஆர்.டி.இ கல்வி கட்டண பாக்கியை உடனே வழங்கிட வேண்டும்.இல்லையென்றால் பல பள்ளி நிர்வாகிகள் தற்கொலை செய்து கொள்வதற்கான சூழ்நிலை உள்ளதை தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.காலம் தாழ்த்தாமல் உடனே இப்பிரச்னையில் தலையிட்டு உரிய பரிகாரம் காண வேண்டும்” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.