சென்னை: இதுதொடர்பாக தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் நந்தகுமார் கூறுகையில், "தனியார் பள்ளிகளின் நிர்வாகம் கரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோர்கள் கல்விக்கட்டணங்களை செலுத்தாமல் உள்ளனர். மேலும், இந்தாண்டு அரசுப் பள்ளிகளில் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை மாற்றுச்சான்றிதழ் இல்லாமல் சேர்க்கின்றனர்.
எனவே, இது போன்ற தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தின் முன்னர் ஜூலை 5ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தனியார் பள்ளி மாணவர்களை மாற்றுச்சான்றிதழ் இல்லாமல் சேர்க்கக்கூடாது என அரசு உத்தரவிட வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: மாற்றுச் சான்றிதழ் அவசியம் என்று தனியார் பள்ளிகள் சங்கத்தினர் வாதம்!