சென்னை நீலாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார். இவர் கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றிவந்தார்.
இந்நிலையில் இன்று (செப்.21) காலை 11.50 மணியளவில் கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் வினோத் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தபோது மாநகர பேருந்து மற்றும் மாநகராட்சிக் குப்பை லாரி ஆகியவற்றிற்கு இடையே நுழைந்து சென்றுள்ளார்.
அப்போது நிலை தடுமாறி அவர் லாரியின் பின் சக்கரத்தில் மாட்டியுள்ளார். தொடர்ந்து அவரின் தலைக்கவசம் கழண்டதால் லாரியின் சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் வினோத் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர்.