ETV Bharat / state

காப்பீட்டுத் திட்டத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது: தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவு! - 6 New Medical Colleges For Tamilnadu

சென்னை: முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் தனியார் மருத்துவமனைகள் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

private-hospitals-should-not-ask-money-from-patients-in-cm-medical-insurance
author img

By

Published : Nov 20, 2019, 5:04 PM IST

சென்னையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட தனியார் மருத்துவமனைகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விருது வழங்கினார். அப்போது அமைச்சர் பேசுகையில், 2012ஆம் ஆண்டு தொடங்கிய முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 1078 நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 8 நோய்களுக்கு சிறப்பு உயிர் சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் சிறு அறுவை சிகிச்சை முதல் உயர்தர சிகிச்சை அளிக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் 1002 மருத்துவமனைகள் இந்தத் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ரூ. 6,451 கோடி மதிப்பீட்டில் 40 லட்சத்து 53 ஆயிரம் பயனாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு உள்ளது.

ஆண்டுக்கு 1361 கோடி ரூபாய் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு செலவிடுகிறது. கூடுதலாக நிதி தேவைப்பட்டால் அதனையும் அரசு ஒதுக்க தயாராக இருக்கிறது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் நோயாளிகளை தேர்வு செய்யும் மருத்துவமனைகள் அவர்கள் கூறிய முழு செலவையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். நோயாளிகளிடம் கட்டணம் எதுவும் கூடுதலாக கேட்கக் கூடாது. மேலும் அவர்களுக்கு குறிப்பிட்ட தொகை தான் அனுமதிக்கப்பட்டுள்ளது என மருத்துவமனைகள் தெரிவிக்கக்கூடாது. இந்தத் திட்டத்தில் தேர்வுசெய்யும் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சையை தனியார் மருத்துவமனைகள் வழங்க வேண்டும் என பேசினார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் ஒரே நேரத்தில் ஆறு புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த மருத்துவக் கல்லூரிகளுக்கான மருத்துவமனை வரைபடங்கள் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஒரு மருத்துவக் கல்லூரிக்கு ரூ. 100 கோடி வீதம் ஆறு மருத்துவ கல்லூரிகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். மேலும் கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் புதிய மருத்துவக்கல்லூரி தொடங்கவும் அனுமதி கேட்டுள்ளோம் எனக் கூறினார்.

இதையும் படிங்க: மாப்பிள்ளை சென்னைதான்... ஆனா யாருனு சொல்லமாட்டேன் - நிக்கி கல்ராணி!

Intro: தனியார் மருத்துவமனைகள் காப்பீட்டு திட்டத்தில்
கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது

Body:சென்னை,
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் தனியார் மருத்துவமனைகள் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சென்னையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட தனியார் மருத்துவமனைகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விருது வழங்கினார். அப்போது பேசிய அமைச்சர் 2012ஆம் ஆண்டு தொடங்கிய முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 1078 நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறப்பு உயிர் சிகிச்சைகளும் 8 நோய்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் சிறு அறுவை சிகிச்சை முதல் உயர்தர சிகிச்சை அளிக்கப்படுகின்றன.
தமிழகத்தில் 1002 மருத்துவமனைகள் இந்தத் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 6,451 கோடி மதிப்பீட்டில் 40 லட்சத்து 53 ஆயிரம் பயனாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு உள்ளது.

வருடத்திற்கு 1361 கோடி ரூபாய் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு தமிழக அரசு செலவிடுகிறது. கூடுதலாக நிதி தேவைப்பட்டால் அதனையும் அரசு ஒதுக்க தயாராக இருக்கிறது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் நோயாளிகளை தேர்வு செய்யும் மருத்துவமனைகள் அவர்கள் கூறிய முழு செலவையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். நோயாளிகளிடம் கட்டணம் எதுவும் கூடுதலாக கேட்கக் கூடாது. மேலும் அவர்களுக்கு குறிப்பிட்ட தொகை தான் அனுமதிக்கப்பட்டுள்ளது என மருத்துவமனைகள் தெரிவிக்கக் கூடாது.
இந்தத் திட்டத்தில் தேர்வுசெய்யும் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சையை தனியார் மருத்துவமனைகள் வழங்க வேண்டும் என பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் வரலாற்று சாதனையாகவே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு ஒரே நேரத்தில் ஆறு புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த மருத்துவ கல்லூரிகளுக்கான மருத்துவமனை வரைபடங்கள் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஒரு மருத்துவக் கல்லூரிக்கு 100 கோடி வீதம் ஆறு மருத்துவ கல்லூரிகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்.
மேலும் கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம்,
திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் புதிய மருத்துவக்கல்லூரி தொடங்கவும் அனுமதி கேட்டுள்ளோம் எனக் கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.