சென்னை: தமிழ்த் திரையுலகில் எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட மாபெரும் நடிகர்களுக்குப் பாடல்கள் எழுதி பிரபலம் அடைந்தவர் கவிஞர், பாடலாசிரியர் புலமைப்பித்தன். எம்ஜிஆரின் 'குடியிருந்த கோயில்' படத்தில் இடம்பெற்ற 'நான் யார், நான் யார், நான் யார்' என்ற பாடலை எழுதியதன் மூலம் இவர் பிரபலம் அடையத் தொடங்கினார்.
அதன்பிறகு எம்ஜிஆரின் 'அடிமைப் பெண்', 'உலகம் சுற்றும் வாலிபன்' உள்ளிட்ட ஏராளமான படங்களில் புலமைப்பித்தனின் பாடல் வரிகள் இடம்பெற்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான வடிவேலுவின் 'இம்சை அரசன் 23.ம் புலிகேசி', 'தெனாலிராமன்', 'எலி' உள்ளிட்ட படங்களிலும் இவரது பாடல்கள் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி நள்ளிரவில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட புலமைப்பித்தன், சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது மருத்துவமனை நிர்வாகம் சார்பில் புலமைப்பித்தனின் உடல்நிலை குறித்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ''உயிர்க் காக்கும் கருவியின் உதவியுடன் கவிஞர் புலமைப்பித்தனுக்கு மருத்துவம் அளிக்கப்பட்டுவருகிறது. அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகிறது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நடிகர் ஆர்யா மோசடி வழக்கில் திருப்பம்