சென்னை: சென்னை மெட்ரோ ரயில்கள் பராமரிப்பது தொடர்பாக தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொண்டது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-1-இல் கோயம்பேடு பணிமனை மற்றும் விம்கோ நகர் பணிமனையில் மெட்ரோ ரயில்களைப் பராமரிப்பது, முன்னேற்ற திட்டமிடல் மற்றும் விசாரணை அலுவலகம் (PPIO) மற்றும் பணிமனை கட்டுப்பாட்டு சேவைகளுக்கான ஒப்பந்தம் MEMCO அசோசியேட்ஸ் (இந்தியா) பிரைவேட் நிறுவனத்திற்கு ரூ.21.16 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பு கடிதம் MEMCO அசோசியேட்ஸ் (இந்தியா) பிரைவேட் நிறுவனத்திற்கு கடந்த நவ.9 அன்று வழங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) மற்றும் MEMCO அசோசியேட்ஸ் (இந்தியா) பிரைவேட் நிறுவனத்தின் பொது மேலாளர் - மெட்ரோ திட்டம் ஜி.வீராகுமார் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
-
Phase-1 Rolling Stock #Maintenance Contract Agreement signed with M/s MEMCO Associates (India) Private limited.#cmrl #chennaimetro #metro #metroupdate #chenai pic.twitter.com/V7EKRjGVME
— Chennai Metro Rail (@cmrlofficial) December 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Phase-1 Rolling Stock #Maintenance Contract Agreement signed with M/s MEMCO Associates (India) Private limited.#cmrl #chennaimetro #metro #metroupdate #chenai pic.twitter.com/V7EKRjGVME
— Chennai Metro Rail (@cmrlofficial) December 30, 2023Phase-1 Rolling Stock #Maintenance Contract Agreement signed with M/s MEMCO Associates (India) Private limited.#cmrl #chennaimetro #metro #metroupdate #chenai pic.twitter.com/V7EKRjGVME
— Chennai Metro Rail (@cmrlofficial) December 30, 2023
கட்டம் 1இல் கோயம்பேடு பணிமனை மற்றும் விம்கோ நகர் பணிமனையில் மெட்ரோ ரயில்களைப் பராமரிப்பது, முன்னேற்ற திட்டமிடல் மற்றும் விசாரணை அலுவலகம் (PPIO) மற்றும் பணிமனை கட்டுப்பாட்டு மையம் பராமரிப்பது போன்றவை இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.
இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன் (தொடர்வண்டி மற்றும் இயக்கம்), இணை பொது மேலாளர் சி.பாலமுருகன் (தொடர்வண்டி மற்றும் இயக்கம்), மெம்கோவின் முதன்மை செயல் அதிகாரி ஜோஷ்வா ராஜ்குமார், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் மெம்கோவின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தாமிரபரணி நீர் வரத்து அதிகரிப்பு-நெல்லை மலைகளில் மீண்டும் தொடர் மழை