கடந்த நவம்பர் மாதம் 7ஆம் தேதி சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக அன்னை சத்யா நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மகாலிங்கம் (41), நீலகண்டன் (38) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 38 கிலோ கஞ்சா, ஆட்டோ, இரண்டு செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர் மகாலிங்கம் நேற்று (டிச.9) இரவு திடீரென மயங்கி விழுந்தார். அவரை சிறைக் காவலர்கள் ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் ஆட்டோ ஓட்டுநர் மகாலிங்கம் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
உயிரிழந்த கைதி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே முழுவிவரம் தெரியும் என கோட்டூர்புரம் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கோவை மத்திய சிறையில் கைதி தூக்கிட்டுத் தற்கொலை?