தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது 66ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது அந்த ட்வீட்டில், "தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் அவர் மக்கள் சேவையில் ஈடுபட இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: 'வைரஸ் மனித குலத்தை தொடர்ந்து பாதிக்கும்'- ஹர்ஷ் வர்தன் பிரத்யேக பேட்டி