ETV Bharat / state

வனவிலங்கு வேட்டையாடுதலை தடுக்க "தேசிய இலவச தொலைபேசி எண்" - தேசிய இலவச தொலைபேசி எண்

வனவிலங்கு வர்த்தகம் மற்றும் வேட்டையாடுதலை தடுக்க தேசிய இலவச தொலைபேசி எண் வெளியிடப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 30, 2022, 8:49 PM IST

சென்னை: நாடு முழுவதும் வனவிலங்குகள் கடத்தல் தொடர்பாக பல்வேறு புகார்கள் வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MoEFCC) வனவிலங்கு வர்த்தகம் மற்றும் வேட்டையாடுதல் தொடர்பான எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கையும் பற்றிய புகார்களுக்கு என தேசிய இலவச தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது.

தேசிய இலவச தொலைபேசி எண்
தேசிய இலவச தொலைபேசி எண்

அதன்படி சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் 1800-11-9334 என்ற தேசிய இலவச உதவி எண்ணை வெளியிட்டுள்ளது. இந்த எண்ணை பரவலாக விளம்பரப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மாநிலங்கள் முழுவதும் உள்ள அனைத்து வனத் துறை அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே நாட்டின் பல இடங்களில் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம் மற்றும் கடத்தல் தொடர்பான பல புகார்கள் வந்துள்ளன. அதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: வளர்ப்பு நாய்க்கு சீமந்தம்.. சீர்காழி குடும்பத்தின் பாசம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.