ETV Bharat / state

"சினிமா மீது ஆசை இருந்தால் உடனே வந்துவிடுங்கள்" - நடிகர் இளவரசு அட்வைஸ்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 22, 2023, 8:04 PM IST

இயக்குநர் அருள்செழியன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் குய்கோ திரைப்படம் நவம்பர் 22ஆம் தேதி வெளியாகும் நிலையில், அப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

குய்கோ படத்தின் செய்தியாளர் சந்திப்பு
குய்கோ படத்தின் செய்தியாளர் சந்திப்பு

சென்னை: செய்தித் துறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக இயக்குநர் அருள்செழியன் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், தற்போது முதல் முறையாக குய்கோ என்ற படத்தை இயக்கி இயக்குநராகவும் புது அவதாரம் எடுத்து உள்ளார். குடியிருந்த கோயில் என்ற வார்த்தையின் சுருக்கமே குய்கோ.

இப்படத்தில் விதார்த், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப்படம் நவம்பர் 24ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் அருள்செழியன், விதார்த், இசை அமைப்பாளர் ஆண்டனி தாசன், இளவரசு, நாயகி ஸ்ரீ பிரியங்கா, துர்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது நடிகர் இளவரசு பேசும் போது, "இங்கே இருக்கும் பத்திரிகையாளர்களில் நிறைய பேர் சினிமா ஆசையில் இருப்பவர்கள் தான் என்று எனக்கு தெரியும். இப்போது நிறைய இளைஞர்கள் இந்த துறையில் உள்ளனர். இயக்குநர் அருள்செழியன் வாய்ப்பு கிடைத்தும் தாமதமாக இயக்குநர் ஆகியுள்ளார்.

உங்களில் யாருக்காவது சினிமா மீது ஆசை இருந்தால் உடனே வந்துவிடுங்கள். அதை விட்டுவிட்டு அங்கேயே இருந்தால் உங்களது உழைப்புதான் திருடப்படும். சினிமாவில் படம் இயக்குவது சுலபம். இந்தப்பட இயக்குநருக்கு அருமையான டீம் அமைந்தது. சினிமாவில் விதார்த் போன்றவர்களின் வெற்றிதான் எதிர்காலத்திற்கான வெற்றி.

இப்படம் நன்றாக ஓட வேண்டிய படம். நல்ல கதை தயாரிப்பாளருடன் உருவாகும் இம்மாதிரியானச் சின்ன படங்களுக்கு பெரிய விளம்பரம் செய்து படம் திரையரங்குகளில் ஓட வேண்டும்" என்று பேசினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய நடிகர் விதார்த், "முதலில் ஆண்டனி தாஸனுக்கு நன்றி. இப்படத்தில் இசை மிகவும் பிரமாதமாக அமைந்துள்ளது. இந்தப்படம் நான்‌ தயாரிக்க வேண்டிய படம். இதில் ரமேஷ் திலக் நடிக்க வேண்டியது. அதன்பிறகு தயாரிப்பாளர் கேட்டுக் கொண்டதால் நான் நடித்தேன்.

இப்படத்திற்குள் இணையக் காரணம் முழுக்க முழுக்க இந்த கதைதான். வாழ்வியல் சார்ந்த கதையாக இருக்கும். ஒரு அற்புதமான இயக்குநர் ஜெயிக்க வேண்டும் எனறால் இப்படம் மக்களிடம் போய் சேர வேண்டும்" என்று பேசினார்.

இதையும் படிங்க: "விஜயகாந்த் போல கடுமையாக உழைத்தோம்" - சூரகன் பட கதாநாயகன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.