ETV Bharat / state

சென்னை வந்த குடியரசுத்தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு உற்சாக வரவேற்பு - Yashwant Sinha chennai visit

குடியரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யஷ்வந்த சின்ஹா இன்று சென்னை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

குடியரசுத்தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா சென்னை வருகை!

author img

By

Published : Jun 30, 2022, 1:53 PM IST

Updated : Jun 30, 2022, 4:21 PM IST

சென்னை: தற்போதைய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் புதிய குடியரசுத்தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல், ஜூலை 18 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனிடையே குடியரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா தேர்வு செய்யப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

இதனையடுத்து அனைத்து மாநிலங்களுக்கும் சென்று கூட்டணி கட்சி மற்றும் முக்கிய தலைவர்களை யஷ்வந்த் சின்ஹா, சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அந்த வகையில் இன்று (ஜூன் 30) மாலை 5 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டவுள்ளார்.

இதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் யஷ்வந்த் சின்ஹா காரில் புறப்பட்டுச் சென்றார்.

குடியரசுத்தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா சென்னை வருகை!

தொடர்ந்து இன்று மாலை 5 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்கிறார். பின்னர், கூட்டணி கட்சி எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் ஆகியோரை சந்திக்கவுள்ளார். பின்னர், மாலை 6 மணிக்கு யஷ்வந்த் சின்ஹா, செய்தியாளர்களைச் சந்திக்கிறார்.

இதனைத்தொடர்ந்து இரவு சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார். நாளை (ஜூலை 1) காலை 10 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து ராய்ப்பூர் புறப்பட்டுச் செல்கிறார்.

இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரிய வழக்கு - விசாரிக்க மறுத்த உயர் நீதிமன்றம்

Last Updated : Jun 30, 2022, 4:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.