ETV Bharat / state

மேட்டூர் அணையிலிருந்து முன்கூட்டியே நீர் திறப்பு - விவசாயிகளுக்கு சாதகமானதா?

மேட்டூர் அணையிலிருந்து முன்கூட்டியே நீர் திறக்கப்பட்டுள்ளதால், உண்மையிலேயே விவசாயிகளுக்கு சாதகமான சூழ்நிலை உருவாக சில இடையூறுகள் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து முன்கூட்டியே நீர் திறப்பு - விவசாயிகளுக்கு சாதகமானதா?
மேட்டூர் அணையிலிருந்து முன்கூட்டியே நீர் திறப்பு - விவசாயிகளுக்கு சாதகமானதா?
author img

By

Published : May 25, 2022, 3:50 PM IST

சென்னை: சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் முதன்முறையாக நேற்று (மே 24) மேட்டூர் அணையிலிருந்து 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 4 லட்சம் ஏக்கர் நெல் பாசனத்திற்காக காவிரியில் நீர் திறக்கப்பட்டது. வழக்கமாக ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படும் மேட்டூர் அணை, இந்த ஆண்டு முன்கூட்டியே திறக்கப்பட்டுள்ளது. இதனை டெல்டா விவசாயிகள் வரவேற்ற நிலையில், ஒரு பகுதியினருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், மேட்டூர் அணையில் சேமிக்கப்படும் நீர், அடுத்து வருகின்ற நாட்களில் அதன் முழுக் கொள்ளளவை (120 அடி) எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று (மே 25) காலை 6 மணி நிலவரப்படி , அணையின் நீர்மட்டம் 117.760 அடியாக இருந்தது.

மேலும், அணைக்கு 10,508 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருந்தது. அதேநேரம், அணையிலிருந்து விநாடிக்கு 3,000 கன அடி நீர், டெல்டா மாவட்டங்களின் குறுவை பயிர் சாகுபடிக்காக வெளியேற்றப்பட்டிருந்தது. தொடர்ந்து அணைக்கு நீர் வரத்து வந்து கொண்டிருப்பதால் அணையிலிருந்து முன்கூட்டியே நீர் திறந்து விடப்பட்டது.

அரசுக்கு அவகாசம் உண்டு: இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'வழக்கமாக, அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்படும். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறப்பதால் பல நன்மைகள் உள்ளன. தண்ணீரை முன்கூட்டியே திறப்பதால் குறுவை மட்டுமல்லாமல் சம்பா பயிர்களுக்கும் தண்ணீரை அதிக அளவில் பயன்படுத்துவதற்கு அதிக வாய்ப்புண்டு.

மேலும், டெல்டா பகுதியின் கடைசி மாவட்டமான நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு தண்ணீர் சென்றால், தென்மேற்கு பருவமழையை சாமர்த்தியமாக கையாண்டு, அதன் மூலம் பயிர்களை தண்ணீரில் மூழ்காமல் காப்பாற்ற முடியும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும். அதிக அளவில் மகசூல் கிடைப்பது மட்டுமல்லாமல் சரியான நேரத்தில் நெல் கொள்முதல் செய்ய அரசுக்கு போதுமான அவகாசம் கிடைக்கும். குறிப்பாக, கன மழை மற்றும் வெள்ளத்தினால் பயிர்ச்சேதம் தவிர்க்கப்படலாம்.

எதுவுமே தயாராக இல்லை: இதுகுறித்து பாரதிய கிசான் சங்கத்தின் மாநில செயலாளர் என். வீரசேகரன் கூறுகையில், "மேட்டூர் அணையிலிருந்து முன்கூட்டியே தண்ணீர் திறந்து விடப்பட்டது வரவேற்கத்தக்கது என்றாலும், விவசாயிகள் இன்னும் குறுவை பயிர் சாகுபடிக்கு தயாராகவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. மேலும் விதைகள், உரங்கள் உள்ளிட்ட மூலப்பொருட்கள் தயாராக இருந்தாலும் விளைநிலங்கள் இன்னும் தயாராகவில்லை.

தற்பொழுதுதான் உளுந்து மற்றும் எள் அறுவடை முடிந்துள்ளது. மேலும், இன்னும் ஒரு மாத கால அவகாசம் தேவை. இந்த தண்ணீர் திறப்பால் வாழை மற்றும் கரும்பு பயிர்கள் மட்டும் பயனடையும். டெல்டாவின் முக்கிய விளைச்சல் என்றாலே நெல்தான். வழக்கமாக ஜூலை மாதத்தில் குறுவை சாகுபடி தொடங்கப்படும். தொடர்ந்து செப்டம்பர் மாதம் அறுவடை செய்யப்படும். இதனால் அறுவடை செய்த நெல்லுக்கு நல்ல விலை கிடைக்காது.

ஏனெனில், மத்திய அரசு அக்டோபர் முதல் வாரத்தில்தான் நெல்லுக்கான குறைந்தபட்ச விலையை அறிவிக்கும். இந்த இடைப்பட்ட தினங்களில் அறுவடை செய்த நெல்லை பாதுகாக்க விவசாயிகளிடமோ, அரசாங்கத்திடமோ போதுமான வசதிகள் இல்லை. மேட்டூர் அணையின் பாதுகாப்புக் கருதியே தண்ணீர் முன்கூட்டியே திறக்கப்படுகிறது என்பதுதான் யதார்த்தமான உண்மை” எனத் தெரிவித்தார்.

மேட்டூர் அணையிலிருந்து முன்கூட்டியே நீர் திறப்பு - விவசாயிகளுக்கு சாதகமானதா?

மத்திய அரசு மறுப்பு: இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு விவாசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் தலைவர் காவேரி வே. தனபாலன், "மேட்டூர் அணையில் முன்கூட்டியே தண்ணீர் திறப்பதனால் விவசாயிகள் எந்த ஒரு கசப்பான விஷயங்களையும் எதிர்கொள்ளவில்லை. தற்போது, ஆழ்துளைக் கிணறுகள் வைத்திருக்கக்கூடிய விவசாயிகள்தான் தங்களது விலைநிலங்களில் நெற்பயிரைத் தவிர, வேறு தோட்டப்பயிர்களையே சாகுபடி பண்ணியிருக்க முடியும்.

ஒரு வழியும் இல்லாத விவசாயிகள்தான் நெல்லை மட்டும் நம்பியிருக்கிறார்கள். மேலும் முன்கூட்டியே தண்ணீரை திறப்பதால் கடைமடையில் உள்ள விவசாயிகள் வெள்ளம் வந்தாலும் தங்களது பயிர்களைப் பாதுகாக்க முடியும். மத்திய அரசு பெரிய அளவிலான குறைந்தபட்ச விலையை கொடுக்காது” எனக் கூறினார்.

பருவமழை கணிப்பு: மேலும், திருச்சி மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன், “காவிரி பாசனப் பகுதிகள் உள்ள சிறு சிறு கிளை கால்வாய்களை 100 நாள் பணியாளா்களை கொண்டு சுத்தம் செய்து கடைமடைப் பகுதிகள் வரை தண்ணீா் தடையின்றி செல்ல உாிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, நல்ல முறையில் தூர்வாரும் பணிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனால் கன மழை பெய்தாலும், நீர் வரத்து அதிகமாக இருந்தாலும் வெள்ளத்தைப் பற்றி விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை” எனத் தெரிவித்தார்.

ஏற்கெனவே, தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கும் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கணித்துள்ளது. இதனால் விவசாயிகள் அதிக ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய முடியும் எனவும் பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: அனைத்து விவகாரங்களிலும் மத்திய அரசுடன் சண்டை போடும் திமுக - சசிகலா குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.