சென்னை: ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் என்ற ஆன்லைன் ரேபிட் செஸ் போட்டி தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் சென்னையைச் சேர்ந்த 16 வயது வீரர் பிரக்ஞானந்தா உள்பட 16 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
8ஆவது சுற்றுப் போட்டியில் பிரக்ஞானந்தா உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனை இன்று (பிப்ரவரி 21) எதிர்கொண்டார். தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய பிரக்ஞானந்தா வெறும் 39 நகர்வுகளில் கார்ல்சனை வீழ்த்தி அசத்தினார்.
இந்தத் தொடரில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் கார்ல்சன் வெற்றிபெற்றிருந்தார். பிரக்ஞானந்தா, ஏழு சுற்றுகள் விளையாடி ஒரு வெற்றி, இரண்டு டிரா, நான்கு தோல்விகளைப் பெற்றிருந்தார். கார்ல்சனுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து, மொத்தம் 8 புள்ளிகளுடன் 12ஆவது இடத்தில் உள்ளார்.
போட்டியில் வெற்றுபெற்றால் மூன்று புள்ளிகள், டிரா செய்தால் ஒரு புள்ளி வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க: இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் கேப்டனாக ரோஹித் சர்மா