சென்னை: மின் தடை அறிவிப்பு குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் கொடுத்துள்ள அறிவிப்பில், 'சென்னையில் நாளை (பிப்.16) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக பூந்தமல்லி, பெரம்பூர் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
குறிப்பாக பூந்தமல்லியில் திருமழிசை பீடர் பகுதியிலும், பெரம்பூரில் தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை, டீச்சர்ஸ் காலனி 2 முதல் 6வது தெரு, கிருஷ்ணன் தெரு ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும். இதே போன்று நாளை மறுநாள்(பிப்.17) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கோவிலம்பாக்கம், மணலி பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும். குறிப்பாக கோவிலம்பாக்கத்தில் துரைபாக்கம் ரோடு, மேடவாக்கம் மெயின் ரோடு, திருவின் நகர், பூபதி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மேலும், மணலியில் கலைஞர் நகர், சி.பி.சி.எல்.நகர், 200 அடி ரோடு, பர்மா நகர், பொன்னேரி நெடுஞ்சாலை, எம்.எம்.டி.எ.பேஸ் 1 & 2, சாத்தாங்காடு ஸ்டீல்யார்டு, கார்கில் நகர், சத்தியமூர்த்தி நகர், சொக்கம்மாள்புரம், எ.சி.சி. மெயின் ரோடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் மின் விநியோகம் நிறுத்தப்படும்’ என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க:Video:4 சிறுமிகள் பலி; புதுக்கோட்டையில் பள்ளியை முற்றுகையிட்டு கதறி அழுத பெற்றோர்