ETV Bharat / state

மின்கம்பி அறுந்து விழுந்து ஒருவர் பலி; மின்வாரியத்தை கண்டித்து போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் போலீஸ் பேச்சுவார்த்தை

மின்கம்பி அறுந்து விழுந்து ஒருவர் பலியான நிலையில், மின்வாரியத்தை கண்டித்து அவரது உடலை கொடுக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

power line fell down person died public started protesting to take action against the Electricity board officers
மின்கம்பி அறுந்து விழுந்து ஒருவர் பலி; மின்வாரியத்தை கண்டித்து போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் போலீஸ் பேச்சுவார்த்தை
author img

By

Published : Feb 20, 2023, 10:45 PM IST

மின்கம்பி அறுந்து விழுந்து ஒருவர் பலி; மின்வாரியத்தை கண்டித்து போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் போலீஸ் பேச்சுவார்த்தை

சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில்(42). இவர் பெரும்பாக்கத்தில் சிக்கன் பக்கோடா கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள், ஒரு மகன். இவர் இன்று காலை 10 மணியளவில் தனது பிள்ளைகளை அழைத்துக் கொண்டு பள்ளியில் விட்டு, விட்டு நேதாஜி மெயின் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது மின் கம்பி அறுந்து அவர் மீது விழுந்துள்ளது. இதில் இதில் இஸ்மாயில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து அவர் உயிரிழந்தார்.

இதனை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு அருகில் உடலை சாலையிலேயே வைத்துக் கொண்டு பெரும்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைக்க மறுத்து மின் வாரிய அதிகாரிகள் இங்கு வர வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆபத்தான நிலையில் இருந்த மின்கம்பிகள் குறித்து பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளாமல் இருந்ததால் தான் விபத்து நேரிட்டதாகவும், மின்வாரிய அதிகாரிகளை கைது செய்யவும் பொதுமக்கள் வலியுறுத்தினர்.

போராட்டம் நடத்தியவர்களிடம் பள்ளிகரணை துணை ஆணையர் ஜோஸ் தங்கையா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசாரின் பேச்சுவார்த்தையில் மின்வாரிய ஊழியர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், மின்வாரியம் சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும், அரசு சார்பில் வீடு, நிவாரணம் வழங்கவும், குழந்தைகளின் எதிர்கால கல்வியை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

போராட்டகாரர்களிடம் தாம்பரம் தாசில்தார் கவிதா உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பின்னர் 4 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்து உடலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: தமிழ்நாடு மாணவர்களை தாக்கிய ABVP - கண்டனம் தெரிவித்து கனிமொழி ட்வீட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.