சென்னை: முதுகலை ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வை நடத்திய பிறகே, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வினை நடத்த வேண்டும் என முதுகலை ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து நேற்று (பிப்.14) சென்னை டிபிஐ வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க ஆசிரியர்கள் தற்போதைய பணியிடத்தில் ஓராண்டு பணி நிறைவு செய்திருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டதால், இம்மாதம் 11, 12 ஆம் தேதி நடைபெற இருந்த முதுகலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது.
அதே வேளையில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு நடத்தப்பட்டால் முதுகலை ஆசிரியர்களுக்கு உள்ள காலிப்பணியிடங்களில் 1200க்கும் மேற்பட்ட இடங்கள் பறிபோகும் என்பதால் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வை நடத்த எதிர்ப்பு தெரிவித்து முதுகலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈட்டுப்பட்டனர்.
இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தற்போது நடைபெற்று வரும் பொது மாறுதல் கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது எனவும் வரும் மார்ச் 15ஆம் தேதிக்குப் பின்னர் புதிய கலந்தாய்விற்கான அட்டவணை வெளியிடப்படும்" என அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'தனியார் மருத்துவக் கல்லூரியில் 50% இடங்களுக்கு அரசின் கட்டணம் வசூலிக்க வேண்டும்'