ETV Bharat / state

வாக்கா... வைரஸா... காவல் துறையினரின் தபால் வாக்குப்பதிவில் காணாமல் போன கரோனா விதிகள்! - கரோனா விதிகள்

சென்னை: காவல் துறையினர் தபால் வாக்குப்பதிவு காலதாமதத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Police postal vote
Police postal vote
author img

By

Published : Mar 31, 2021, 1:54 PM IST

காவல் துறையினர் தேர்தலின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என்பதால் அவர்கள் தபால் வாக்கு அளிப்பது தொடர்பான உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது. சென்னை காவல்துறையினருக்கு இன்று (மார்ச்.31) தபால் வாக்குப் பதிவு தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு செய்யும் பணி தொடங்கி உள்ளது. அவ்வாக்குச்சாவடி மையங்கள் பின்வருமாறு:

  • ஆர்கே நகர் தொகுதி- சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி
  • பெரம்பூர் தொகுதி - அம்பேத்கர் அரசு கலைக்கல்லுாரி
  • வில்லிவாக்கம் தொகுதி- ஐசிஎப் உயர்நிலைப் பள்ளி வளாகம்
  • திருவிக தனித்தொகுதி- சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி
  • எழும்பூர் தனித் தொகுதி- ராட்லர் தெரு சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி
  • ராயபுரம் தொகுதி- புனித பீட்டர்ஸ் உயர்நிலைப்பள்ளி
  • துறைமுகம் தொகுதி- பிராட்வே பிரகாசம் சாலையில் பாரதி மகளிர் கல்லுாரி
  • திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் தொகுதி - டாக்டர் பெசன்ட் ரோட்டில் உள்ள உயர்நிலைப்பள்ளி
  • ஆயிரம் விளக்கு தொகுதி- நுங்கம்பாக்கம் ராஜாஜி வடக்கு சாலையில் உள்ள சென்னை பெண்கள் உயர்நிலைப்பள்ளி
  • அண்ணாநகர், அரும்பாக்கம் தொகுதி- டிஜி வைஷ்ணவா கல்லுாரி
  • விருகம்பாக்கம் தொகுதி - மீனாட்சி இன்ஜினியரிங் கல்லுாரி
  • சைதாப்பேட்டை தொகுதி - நந்தனம் அரசு கலைக்கல்லுாரி
  • தி.நகர் தொகுதி, கோடம்பாக்கம் -டிரஸ்ட்புரம் சென்னை உயர்நிலைப்பள்ளி
  • மயிலாப்பூர் தொகுதி- ராணி மெய்யம்மை பெண்கள் உயர்நிலைப்பள்ளி
  • வேளச்சேரி தொகுதி - திருவான்மியூர், பாரதிதாசன் தெரு சென்னை உயர்நிலைப் பள்ளி

இத்தொகுதிகளில் காவல் துறையினர் தங்கள் தபால் வாக்கை செலுத்தி வருகின்றனர். காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குச்சாவடிகளில் 9 மணிக்கு தபால் வாக்குப்பதிவு தொடங்கப்படவில்லை. தேர்தல் அலுவலர், ஊழியர்களே காலதாமதமாகதான் வந்துள்ளனர்.

ஒவ்வொரு தேர்தலுக்கும் காலதாமதமாகதான் தபால் வாக்குப்பதிவு தொடங்கப்பட்டு வருகிறது. சென்னையில் கரோனா பரவல் உச்சத்தைத் தொட்டுள்ளது. இதனால் வாக்குப்பதிவு நாளான இன்று அதற்கான விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள இருப்பதாக தேர்தல் ஆணையம் முன்னதாக அறிவித்திருந்தது.

தபால் வாக்குப்பதிவில் காணாமல் போன கரோனா விதிகள்

ஆனால் காவல் துறை தபால் வாக்குப்பதிவு செய்யும் சைதாப்பேட்டை தொகுதிக்கான வாக்குச்சாவடி மையமான நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் எவ்விதமான கரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மேற்கொள்ளவில்லை. ஆயிரம் விளக்கு தொகுதிக்காக வாக்குப் பதிவு மையம் நுங்கம்பாக்கம், ராஜாஜி வடக்கு சாலையில் உள்ள சென்னை, பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இங்கு தபால் வாக்குகளைப் பதிவு செய்ய வந்த காவல் துறையினர் பலரது பெயர்கள் பட்டியலில் இல்லாததால் சலசலப்பு ஏற்பட்டது. பிறகு பெயர்களைப் பதிவு செய்து, வாக்களிக்க தேர்தல் ஊழியர்கள் அனுமதித்தனர். சென்னையில் காவல்துறையில் ஆறாயிரம் தபால் வாக்குகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தேர்தலுக்காக 14 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.