ETV Bharat / state

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறைகேடு இல்லாமல் நடைபெறும் - தேர்வு துறை உறுதி - Teacher Selection Department

சென்னை: முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை1 ஆகிய காலிப்பணியிடங்களுக்கான ஆன்லைன் எழுத்துத்தேர்வு எந்தவிதமான முறைகேடுகளும் இன்றி வெளிப்படையான முறையில் நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா
author img

By

Published : Sep 24, 2019, 10:15 PM IST

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் நிலை 1 ஆகியவற்றுக்கான ஆன்லைன் வழி தேர்வு வரும் 27, 28 மற்றும் 29 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகின்றன. இந்தத் தேர்வை ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 463 பேர் எழுத உள்ளனர். இவர்களில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 80 பெண் தேர்வர்களும், 63 ஆயிரத்து 375 ஆண் தேர்வர்களும், 8 திருநங்கைகளும் தேர்வு எழுத உள்ளனர்.

அதேபோல் 3,389 மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுத உள்ளனர். 653 தேர்வர்களின் உதவியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆன்லைனில் நடைபெறும் தேர்வானது 100 சதவிகிதம் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பானதாகும். ஆண்ட்ராய்டு மொபைலை பயன்படுத்த தெரிந்த அனைவரும் இந்தத் தேர்வினை எளிதாக எழுதலாம். இதனால் தேர்வு முடிவுகளை எளிதாக வெளியிட முடியும். தேர்வை பாதுகாப்பாக நடத்த பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் அடங்கிய மேற்பார்வை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையத்தில் சோதனை செய்யப்பட்ட பின்னரே தேர்வர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தேர்வர்கள் மின்சாதன பொருட்கள், பெல்ட், ஷூ, செல்போன் போன்றவற்றை எடுத்து வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டில் தேர்வர்களுக்கான விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை தேர்வர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தேர்வர்கள் பெரும்பாலும் அரைக்கை சட்டை அணிந்து வந்தால் அவர்களை சோதனை செய்வது எளிதாக இருக்கும்.

ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா பேட்டி

தேர்வர்களுக்கு வினாக்களும் விடைகளும் மாற்றி மாற்றி கேட்கப்படும். இதன் மூலம் எந்தவித முறைகேடும் நடைபெறாமல் தடுக்கப்படும். தேர்வர்களின் வினாத்தாள் மற்றும் விடைகள் அவர்களின் இணையதள பக்கத்தில் பார்க்க முடியும். தேர்வர் ஒரு வினாவிற்கு விடை அளித்துவிட்டு அதனை மீண்டும் மாற்றி விடை அளிக்கவும் வாய்ப்பு உள்ளது. தேர்வர்கள் அனைத்து வினாக்களுக்கும் விடை கிடைத்த பின்னர் சரி பார்த்து சமர்ப்பிக்க வாய்ப்பு உள்ளது. முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் 6 வாரத்தில் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

Intro:முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறைகேடு இல்லாமல் நடைபெறும்
ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பேட்டி

Body:முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறைகேடு இல்லாமல் நடைபெறும்
ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பேட்டி

சென்னை,

முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை 1 ஆகிய காலிப்பணியிடங்களுக்கான ஆன்லைன் போட்டி எழுத்துத்தேர்வு எந்தவிதமான முறைகேடுகளும் இன்றி வெளிப்படையான முறையில் நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா தெரிவித்தார்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதன் தலைவர் லதா, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் நிலை 1 ஆகியவற்றுக்கான கம்ப்யூட்டர் வழி ஆன்லைன் தேர்வு வரும் 27 ,28 ,29 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகின்றன. இந்தத் தேர்வை ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 463 பேர் எழுத உள்ளனர். இவர்களில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 80 பெண் தேர்வர்களும், 63 ஆயிரத்து 375 ஆண் தேர்வர்களும்,8 திருநங்கைகளும் தேர்வு எழுத உள்ளனர்.

3389 மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுத உள்ளனர்.653 தேர்வர்களுக்கு சொல்வதை எழுதுபவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆன்லைனில் நடைபெறும் தேர்வானது 100 சதவீதம் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பானதாகும். ஆண்ட்ராய்டு மொபைலை பயன்படுத்த தெரிந்த எவரும் இந்தத் தேர்வினை எளிதாக எழுதலாம். தேர்வு முடிவுகளை எளிதாக வெளியிட முடியும்.
தேர்வை பாதுகாப்பாக நடத்த பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ,மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ,காவல்துறை கண்காணிப்பாளர்கள் அடங்கிய மேற்பார்வை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்விற்கு விண்ணப்பித்த தேர்வுகளில் வரிசைபடி தேர்வு மையங்கள் முன்னுரிமை அளித்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் காலத்தில் கூடுதலாக தேர்வு மையங்கள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேர்வு மையங்களுக்கு தேர்வு எழுத வரும் தேர்வர்கள் ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்கு முன்பாக தேர்வு மையத்திற்கு வரவேண்டும்.
தேர்வு மையத்தில் சோதனை செய்யப்பட்ட பின்னரே தேர்வர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தேர்வர்கள் மின்சாதன பொருட்கள், பெல்ட், ஷூ,ஹுல்ஸ், செல்போன் போன்றவற்றை எடுத்து வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

ஹால் டிக்கெட்டில் தேர்வர்களுக்கான விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை தேர்வர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தேர்வர்கள் பெரும்பாலும் அரைக்கை சட்டை அணிந்து வந்தால் அவர்களை சோதனை செய்வது எளிதாக இருக்கும்.

ஆன்லைனில் நடைபெறும் தேர்வில் ஒவ்வொருவருக்கும் அளிக்கப்பட்டுள்ள வினாத்தாளிலும் , வினாக்களும் விடைகளும் மாற்றி மாற்றி கேட்கப்படும். இதன் மூலம் எந்தவித முறைகேடும் நடைபெறாமல் தடுக்கப்படும். தேர்வர்களின் வினாத்தாள் மற்றும் விடைகள் அவர்களின் இணையதள பக்கத்தில் பார்க்க முடியும்.
ஆசிரியர் தேர்வாணையத்தின் சர்வரிலும் அது முழுமையாக சேமித்து வைக்கப்படும். தேர்வர்கள் எப்போது எந்த வினாவிற்கு விடையளித்தார் என்பதையும் கண்டறிய முடியும். மேலும் தேர்வர் ஒரு வினாவிற்கு விடை அளித்துவிட்டு அதனை மீண்டும் மாற்றி விடை அளிக்கவும் வாய்ப்பு உள்ளது. தேர்வர்கள் அனைத்து வினாக்களுக்கும் விடை கிடைத்த பின்னர் சரி பார்த்து சமர்ப்பிக்க வாய்ப்பு உள்ளது .
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் 6 வாரத்தில் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.