ETV Bharat / state

ஒப்பந்தப் பணியாளர்களின் நிலை 'இலவு காத்த கிளி போல' உள்ளது - உயர் நீதிமன்றம் வேதனை

தமிழ்நாடு முழுவதும் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றியவர்களைப் பணி நிரந்தரம் செய்வது குறித்து இரண்டு மாதங்களில் தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஒப்பந்த பணியாளர்களின் நிலை
ஒப்பந்த பணியாளர்களின் நிலை
author img

By

Published : Feb 25, 2021, 9:59 AM IST

தமிழ்நாடு முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் என்னும் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் புரோகிராமர்கள், சிஸ்டம் அனலிஸ்ட்ஸ் போன்ற பணியிடங்களுக்குத் தனியார் ஏஜன்சி மூலம், ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். 2005ஆம் ஆண்டு முதல் 2018 வரை தொடர்ந்து பணியாற்றிவரும் இவர்களுக்குப் பணி நிரந்தரம் வழங்க போக்குவரத்து ஆணையர், உள் துறைச் செயலாளருக்கு 2014, 2017ஆம் ஆண்டுகளில் பரிந்துரைகள் அனுப்பினார்.

இருப்பினும், தங்களுக்குப் பணி நிரந்தரம் வழங்கவில்லை எனக் கூறி, சிவகுமார், கார்த்திகேயன் உள்பட 27 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

அந்த மனுக்களில், வணிகவரித் துறை, நகராட்சி நிர்வாகம் போன்ற துறைகளில் பணியாற்றியவர்களுக்கு, பணிநிரந்தரம் வழங்கப்பட்டுள்ளதால், தங்களுக்கும் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தனர்.

இந்த வழக்குகளுக்குப் பதிலளித்த உள் துறைச் செயலாளர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமோ, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகவோ தேர்வுசெய்யப்படாத இவர்களுக்குப் பணிநிரந்தரம் வழங்க முடியாது எனவும், தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்தப் பணியில் பணியாற்றிய இவர்களுக்குப் பணிநிரந்தரம் வழங்கும்படி, போக்குவரத்து ஆணையர் அளித்த பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஒப்பந்த பணியாளர்களின் நிலை உயர் நீதிமன்றம் நீதிபதி வேதனை
ஒப்பந்தப் பணியாளர்களின் நிலை உயர் நீதிமன்றம் நீதிபதி வேதனை
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், தற்காலிக அடிப்படையில் 10 முதல் 15 ஆண்டுகள் வரை பணியாற்றிய இவர்கள், பணிநிரந்தரம் கிடைக்கும் என, இலவு காத்த கிளிபோல காத்திருக்கின்றனர். உயர் நீதிமன்றம், பிற துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றியவர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்களை நிரந்தரம் செய்ய அரசு தயங்குவது ஏன் எனத் தெரியவில்லை எனக் கூறி, இவர்களுக்கு பணிநிரந்தரம் வழங்குவது குறித்து இரண்டு மாதங்களில் முடிவெடுத்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உள் துறைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், உயர் நீதிமன்றம், மதுரைக் கிளையில் பொதுப்பணித் துறை மூலம் பணிக்கு அனுப்பப்பட்டுள்ள ஒப்பந்தப் பணியாளர்களையும் பணிநிரந்தரம் செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, வேலையில்லாமல் பொருளாதாரச் சிக்கலில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும் எனவும் பணி பறிப்பு என்னும் கத்தி இவர்களின் தலை மீது தொங்கிக் கொண்டிருப்பதை அனுமதிக்க முடியாது எனவும் சுட்டிக் காட்டியுள்ளார்.
முன்னதாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவுச் சங்கங்களில் பணியாற்றும் அனைத்து தற்காலிகப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு (பிப். 19) சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.